districts

இரண்டு தேர்தல்கள் சொல்லும் செய்திகள்!

பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் இரண்டு  பிரதானமான சங்கங்களின் தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்து  முடிந்திருக்கின்றன. பாரம்பரியம் மிக்க தென்னிந்திய பனி யன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா) தேர்தல் செப்டம் பர் 29ஆம் தேதியும், முதன்மையான ஏற்றுமதியாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங் கம் (டீ) தேர்தல் செப்டம்பர் 30ஆம் தேதியும் நடைபெற் றது.

ஜனநாயக நடைமுறை

இரு பிரதான சங்கங்களும், முதலில் ஜனநாயகப்படி, அமைதியான முறையில் இந்தத் தேர்தலை நடத்திக் காட்டி  இருக்கின்றனர் என்பது பாராட்டத்தக்கது, வரவேற்புக்கு ரியது. அதுவும் சைமா தேர்தலில் மொத்த வாக்களிக்கத் தகுதி  பெற்ற உறுப்பினர்கள் 447 பேரில் 430 பேர் வாக்களித்துள்ள னர். இது 96 சதவிகிதம் வாக்குப் பதிவு ஆகும்.  அதேபோல் ஏற்றுமதியாளர் சங்கத் தேர்தலில் மொத்த  உறுப்பினர்கள் 1168 பேரில் 931 பேர் வாக்களித்தனர். இது  80 சதவிகிதம் வாக்குப் பதிவு ஆகும். இந்த அளவு ஆர்வத்து டன்  உறுப்பினர்கள் வந்து வாக்களித்ததை எதிர்பார்க்க வில்லை என்று இரு சங்கத்தின் நிர்வாகத் தரப்பினரும் கூறி னர். இரு சங்கங்களின் தேர்தலையும் ஒரே நிலையில் வைத் துப் பார்ப்பது பொருத்தமானதல்ல. எனினும் இரு தேர்தல்க ளும் அவரவர் சூழலில் முக்கியத்துவமான செய்தியைச் சொல்லி இருக்கின்றன.

சைமா தேர்தல்

சைமா சங்கத்தைப் பொருத்தவரை கடந்த 25 ஆண்டு  காலத்தில் இப்போதுதான் வெளிப்படையான போட்டியு டன் வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கிறது. சைமாவின் தலை வர் ஏ.சி.ஈஸ்வரன் போட்டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டார். எனினும் பொதுச் செயலாளர், பொருளாளர் உள் ளிட்ட இதர நிர்வாகிகள்,  நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பத விக்கு, இரு தரப்பு போட்டி ஏற்பட்டது. ஏ.சி.ஈஸ்வரன் தரப்பில்  ஒரு பிரிவும், “மாற்றத்துக்கான அணி” என்ற பெயரில் மற் றொரு பிரிவும் போட்டியிட்டனர். இதில் கலவையான தீர்ப்பு  வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது நீண்ட காலமாக மாற்றமே இல்லாமல், குறிப் பிட்ட சிலர் மட்டும் தங்கள் அதிகாரப்பிடியைத் தொடர்வது  தெளிவாக நிராகரிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் “மாற்றம்” என்ற பெயரில் நின்ற அணியிலும் சிலர் தோற்றுப்  போயுள்ளனர்.  செயல்படக் கூடியவர்கள், இளைஞர்கள் என்ற அடிப்படையில் பழையவர்களும், புதியவர்களும் கலந் ததாக புதிய நிர்வாகிகள், நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டி ருக்கிறது. மாற்றம் வேண்டும் என்பதற்காக முழுமையாக பழையவர்களை நிராகரித்து விடாமலும், இளைஞர்கள் என்ப தற்காகவே அனைவரையும் வெற்றி பெறச் செய்யாமலும் முடிவு வெளிவந்துள்ளது. இந்திய உள்ளாடைச் சந்தையில் பெருமளவு ஆதிக்கம்  செலுத்தக்கூடிய முன்னணி நிறுவனங்களின் உரிமையாளர் கள்  தோற்கடிக்கப்பட்டு உள்ளனர். அதேசமயம் ஒப்பந்தங்க ளில், பேச்சுவார்த்தைகளில் சங்க முடிவை ஏற்று செயல்ப டக்கூடிய முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் தேர்வாகி யுள்ளனர். மாற்றம் வேண்டும், அதேசமயம் அந்த மாற்றம் எத்தகைய தாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் உணர்த்தக்  கூடியதாக சைமா தேர்தல் முடிவு வந்துள்ளது. தேர்தலுக்குப்  பின்பு பேட்டியளித்த சைமா தலைவர் ஏ.சி.ஈஸ்வரன், “இப் போது நாம் ஒரே அணிதான், அது சைமா அணி” என்று கூறியி ருக்கிறார். ஜனநாயக முறைப்படி ஏற்பட்டிருக்கும் அந்த ஒற் றுமை உணர்வு மிகவும் முக்கியமானது.

ஏற்றுமதியாளர் சங்க தேர்தல்

சைமா தேர்தலில் இருந்து அடிப்படையில் மாறுபட்டது ஏற் றுமதியாளர் சங்கத் தேர்தல். ஏனெனில் கடந்த 9 ஆண்டுக ளுக்கு முன்பு “மாற்றத்துக்கான அணி” என்று மிகப்பெரும் ஆரவாரத்துடன் ராஜா எம்.சண்முகம் தலைமையிலான குழு வினர் போட்டியிட்டனர். அப்போதைய தேர்தலில் தோல்வி  அடைந்தாலும், அதற்கடுத்து இரண்டு முறை அந்த குழுவி னரே ஆறாண்டு காலம் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிக ளாகப் பதவி வகித்தனர். “ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி!” என்ற முழக்கத்து டன், பிரதமர் மோடி இந்த தொழிலைப் பற்றி தொலைநோக் குடன் செயல்படுவதாக வெளிப்படையாக அவரை ஆதரித்து  தொழில் துறையினரை அணிதிரட்டும் வேலையை அவர்கள்  செய்தனர். ஒரு சுயேட்சையான தொழில் அமைப்பு என்ற தங் கள் வரம்பைக் கடந்து நேரடியாக, வெளிப்படையாக மோடி,  பாஜக அரசின் ஆதரவு நிலையை எடுத்தனர். ஆர்எஸ்எஸ்  அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்த சங்க நிர்வாகப் பொறுப் பில் இருந்து கொண்டு, சங்கத்தின் சுயேட்சையான செயல் பாட்டைக் கைவிடச் செய்தனர். மேலும் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, மூலப்பொருளான பஞ்சு, நூல் விலை உயர்வு, அக்சசரீஸ் எனப்படும் உபபொருட்கள் விலையேற்றம் உள் பட பல நெருக்கடிகளை சந்தித்தபோது அவர்கள் உண்மை யில், தொழிலைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியவர்களாக செயல்படவில்லை. கடந்த காலங்களில் தொழில் சந்திக்கும் பிரச்சனைகள், தேவைகள் குறித்து அரசிடம் கோரிக்கை வைப்பது, தலை யிடுவது, தேவைப்பட்டால் பிற சங்கங்களையும் சேர்த்துக்  கொண்டு இயக்கம் நடத்துவது, போராடுவது என செயல்பட்ட  அனுபவம் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்திற்கு உண்டு.  ஆனால் கடந்த ஆறாண்டு காலத்தில் இது கைவிடப்பட்டது. மிக முக்கியமான தருணங்களில் இந்த சங்கத்தின் செயல்பாடு  ஏமாற்றம் தரக்கூடியதாகவே இருந்தது.

தீர்ப்பின் முக்கிய செய்தி

இந்த பின்னணியில்தான் தற்போது நடைபெற்ற தேர்த லின் முடிவைக் காண வேண்டும். கே.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அணியினர், அனைத்து பதவிகளுக்கும் முழுமையாக தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி முதல் நாளி லேயே தங்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். ஆனால்  பதவியில் இருந்த ராஜா சண்முகம் தரப்பினர் ஒரு அணியாகப்  போட்டியிடவில்லை. மாறாக, தலைவர், பொதுச் செயலாளர்  பதவிகள் தவிர பொருளாளர், துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் ஆகிய பதவிகளுக்கு அணி என்று சொல்லாமல் வேட் பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தேர்தல் முடிவில் இவர்களில் ஒரு வர் கூட வெற்றி பெறவில்லை. அனைவரும் தோற்றுப் போனார்கள் என்பது மிகவும் முக்கியமான செய்தியைச் சொல்கிறது. பாஜக அரசின் நிழல் போல செயல்பட்ட, ஆர்எஸ்எஸ் பின் புலம் கொண்டவர்களை உள்ளடக்கிய அணியைச் சார்ந்த வர்கள் என அறியப்பட்டவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை.  இது குறித்து ஏற்றுமதியாளர்களிடம் பேசியபோது, ஏற்கெ னவே பதவியில் இருந்தவர்கள் அணியாகப் போட்டியிட் டிருந்தால் கடுமையான தோல்வியை சந்தித்திருப்பார்கள். அதனால்தான் அவர்கள் தரப்பைச் சார்ந்தவர்கள் தங்கள் தனிப்பட்ட செல்வாக்கில் வாக்கு கேட்டனர், அதற்குரிய வாக் குதான் அவர்களுக்கு கிடைத்தது. இந்த தேர்தல் மற்றொரு செய்தியையும் சொல்கிறது. எந்த  ஒரு குறிப்பிட்ட அரசியல் சார்பும் இல்லாமல், தொழில் வளர்ச்சியை மையப்படுத்தி செயல்பட வேண்டும் என்பதே அது. தற்போது வெற்றி பெற்றிருப்பவர்களுக்கும் இந்த செய்தி பொருந்தும் என்று கூறினர்.

எதிர்ப்பார்ப்பு

இரு தேர்தல்களும், தொழில் பிரச்சனைகளில் துடிப்புடன்  செயல்படும் நிர்வாகங்கள் தேவை என்பதை தெளிவாக உறு திப்படுத்தி உள்ளன. தற்போது உலகளாவிய பொருளாதார தேக்கம், அரசின் தவறான கொள்கைகளால் சிறு, குறு, நடுத் தரத் தொழில்கள் சந்திக்கும் நெருக்கடிகள், உள்நாட்டுச் சந்தை பாதிப்பு என மென்மேலும் சிக்கலான புறச்சூழல் உரு வாகி வருகிறது. இந்த நிலையில் பின்னலாடைத் தொழிலைப்  பாதுகாக்க மிக விரிவான ஒற்றுமை, கொள்கை பிரச்சனைக ளில் தங்கள் தேவையை வெளிப்படையாக முன்வைத்து உறு தியுடன், துணிவுடன் செயல்படுதல் அவசியமாகும். அதை  நோக்கி இரு சங்கங்களின் புதிய நிர்வாகங்கள் செயல்பட  வேண்டும் என்பதே தொழில் துறையினரின் ஒட்டுமொத்த எதிர் பார்ப்பு. 

(வே.தூயவன்)