உடுமலை, அக்.20- வன உயிரின வார விழா ஓவியப்போட் டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பழங்குடியின மாணவர் மாநில அளவில் மூன் றாம் இடத்தை பெற்றிருக்கிறார். ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்தில் வன உயிரின வார விழா கொண்டாடும் விதமாக அக்.2ஆம் தேதி முதல் அக்.8 ஆம் வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே உடுமலைப் பேட்டையில் பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன.மேலும் இணைய வாயிலாக கட்டுரை மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வியாழனன்று பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட் டது. இந்த வன உயிரின வார விழா ஓவியப் போட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி குதிரை அணை, பள்ளியிலிருந்து பழங்குடியின மாணவர் ப. ஸ்ரீராம் மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்றிருந்தார். அவ ருடைய ஓவியத்தை சென்னையில் நடை பெற்ற வன உயிரின வார விழாவின் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இதில் அவர் மாநில அளவில் மூன் றாம் இடத்தை பெற்றார்.