districts

img

ஒலிம்பிக்கை நோக்கி பயணிக்கும் மாற்றுத்திறனாளி

தருமபுரி. டிச.2-  தருமபுரி மாவட்டம், செங்கல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி, துளசி தம்பதி யினரின் மகன் ஆ.கணேசன். கண்பார்வை யற்ற மாற்றுத்திறனாளியான இவர், கிருஷ் ணகிரி மாவட்ட வருவாய்த் துறையில் பணி யாற்றி வருகிறார். இவருக்கு கனகா  என்ற மனைவியும், கோகுல்கண்ணா, தேனிசை என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு மாணவர் பருவத்தில் ஏற்பட்ட பார்வை குறைபாட்டை தொடர்ந்து ஒரு கட்டத்தில் தனது முழு பார்வையும் இழந் தார்.  இதனால் தனது படிப்பை 12 ஆம்  வகுப்போடு நிறுத்தி கொண்ட இவர், நண்பர் களின் உந்துதலால் அரசு தேர்வாணையத் தால் நடத்தப்படும் குருப் 4 தேர்வில் தேர்ச்சி யடைந்தார். பின்னர் வருவாய்த் துறையில்  இளநிலை உதவியாளராக  பணியாற்றி வரு கிறார். சிறுவயதிலிருந்தே அதிக  நினைவாற் றால்  கொண்ட கணேசன் தற்போது 500  தொலைபேசி மற்றும் செல்போன் எண்க ளையும், அந்த எண்ணிற்குரிய பெயர்க ளையும் மனப்பாடமாக  தெரிவிக்கிறார். கணேசனின் இந்த நினைவு திறனை ஆய்வு செய்த யுனிவர்சல் ரிக்கார்டு பாரம் நிறுவனம்  தேசிய நினைவு திறன் சாதனையாளர் விருதை 2016 ஆம் ஆண்டு இவருக்கு வழங் கியது.  தொடர்ந்து விளையாட்டின் மீது ஆர்வம்  கொண்டிருந்த கணேசன் 2019 ஆம் ஆண்டு  மாவட்ட அளவில்  நடைபெற்ற மாற்றுத்திற னாளிகளுக்கான ஓட்டப் பந்தயத்தில் பங்கு பெற்று முதலிடம் பிடித்தார். மேலும், மாற் றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் ஓட்டப்  போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற  வேண்டும் என்பதே இவரின் கனவாக உள் ளது. இதற்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், அரசும் இணைந்து கணேச னுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். சாதனைக்கு குறைபாடு  ஒரு தடையல்ல என்பதை நிருபித்து வரும் கணே சன், ஒலிம்பிக் ஓட்டப் போட்டிகளில் பங் கேற்று சாதிக்க வேண்டும் என்பதே அனை வரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.