districts

img

உதகை மார்க்கெட் பகுதியில் மழைநீர் சூழ்ந்தது கனமழையால் வியாபாரிகள், மாணவர்கள் அவதி

உதகை, செப்.14- உதகையில் பெய்துவரும் கன மழை காரணமாக மார்க்கெட் மற்றும்  கடைகளுக்குள் வெள்ளம் புகுந்த தால் வியாபாரிகள் அவதி அடைந் தனர். கேரளா மாநிலத்தையொட்டி யுள்ள தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத் துள்ளது. குறிப்பாக மலை மாவட்ட மான நீலகிரியில் அதிக அளவு பெய்யும் என அறிவுறுத்தப்பட்டது. இதன்படி கடந்த 2 நாட்களாக கூட லூர், பந்தலூர் தாலுகாக்களில் கன மழை பெய்து வருகிறது.  இந்நிலையில், உதகையில் கடந்த 2 நாட்களாக நன்றாக வெயில்  அடித்த நிலையில், புதனன்று மதியத் திற்கு மேல் கடும் பனிமூட்டமாக மாறியது. இதனால் மதியம் 12 மணிய ளவில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதன்பின்னர் கனமழை பெய்ய தொடங்கியது. உதகை மற்றும் அதனையொட்டியுள்ள முத்தொரை, பாலாடா, நஞ்சநாடு, இத்தலார் உள் ளிட்ட கிராம பகுதிகளில் சுமார் 3  மணி நேரத்திற்கு மேலாக கனமழை  கொட்டியது. இதனால் பொதுமக் களின் இயல்பு வாழ்க்கை கடுமை யாக பாதிக்கபட்டது. குறிப்பாக உதகை நகரில் கொட்டிய கனமழையால் கோடப்ப மந்து கால்வாயில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. இதனால் ரயில் நிலையம் அருகே உள்ள படகு இல்ல  சாலை, குளம் போல மாறியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் கடந்து சென்ற னர்.  அதேபோல் உதகை – கூடலூர் நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள்  மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மார்க்கெட் பகுதி மற்றும் ரயில் நிலையம் அருகே  உள்ள கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் வியாபாரி கள் பெரும் சிரமமடைந்தனர். இந்த  திடீர் மழை காரணமாக பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவி களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

;