districts

img

பிஎஸ்என்எல் சொத்துக்களை விற்க முயற்சி

தருமபுரி டிச. 11- பிஎஸ்என்எல் சொத்துக்களை விற் கும் முடிவை ஒன்றிய அரசு கைவிடக் கோரி, பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  தருமபுரி மாவட்டம், தொலை பேசி  நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, என்எப்டிஇ மாவட்டச் செயலா ளர் கே.மணி தலைமை வகித்தார். அதி காரிகள் சங்க மாநிலச் செயலாளர் கிஷோர் குமார், மாவட்டச் செயலாளர் ஜெகநாதன், ஓய்வுபெற்ற அதிகாரிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் ஆர்.கோபாலன், பிஎஸ்என்எல்இயூ மாநில அமைப்புச் செயலாளர் உமா ராணி, மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன், ஓய்வூதியர் சங்க நிர்வாகி குப்புசாமி ஆகியோர் கலந்து  கொண்டு பேசினர். உத்திரபிரதேச மாநிலம் காசியா பாத் நகரில் பிஎஸ்என்எல் நிறுவனத் திற்க்கு சொந்தமான 83 ஏக்கர் பரப்பள வில் உள்ள நிலம் மற்றும் கட்டிடம் ஆகி யவற்றை ஒன்றிய அரசு விற்க முயற் சித்து வருவதை கண்டித்தும், விற்கும்  முயற்சியை ஒன்றிய அரசு கைவிட கோரியும், முழக்கங்களை எழுப்பினர். கோவை இதேபோன்று, கோவை டெலி காம் கட்டிட வளாகத்தில் பிஎஸ்என் எல் அனைத்து ஊழியர்கள் கூட்ட மைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் எஸ்.மகேஸ்வ ரன் தலைமை வகித்தார்.  இதில், பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலை வர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன், டிஎஸ்எஸ் விடபில்யுஏ கமலக்கண்ணன், எஸ்என் ஈஏ அகில இந்திய உதவித் தலைவர் ராஜேஷ் மச்சன், டிஎபிஎன்எப்டிஈ ஆண் டனி இளங்கோ, ஏஐஜிஈடிஓஏ மாநிலப் பொருளாளர் வி.சுப்பிரமணியம் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.