அவிநாசி, டிச.3- வணிகவியல் துறையில் சர்வதேச வணிகம் பாடப் பிரிவை ஒட்டி, ’நல் வாணிபம் செய்வோம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடை பெற்றது. இந்நிகழ்வில் முதல்வர் ஜெ. நளதம் வர வேற்றார். சிறப்பு விருந்தினராக தனியார் நிறுவனத் தின் நிர்வாகி சக்திவேல் பங்கேற்று, மாணவர் களுக்கு வணிகம் செய்தல் குறித்து விளக்க உரை யாற்றினார். குறிப்பாக, ஒரு நிறுவனத்தை தொடங்குதல், அதற்கான மூலதனம், பணியாட்கள், இயந்திரங்கள், இடர்கள், வங்கியில் கடன் பெறு தல், அரசின் உதவி, தொழில் நுட்பங்கள் குறித்து விளக்க உரையாற்றினார். இந்நிகழ்வை சர்வதேச வணிகத்துறை தலைவர் பாலமுருகன் ஒருங்கிணைத்தார். இதில் மாணவ, மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டு தொழில் தொடங்குவது தொடர்பான தங்களது சந் தேகங்களை கேட்டறிந்து பயன்பெற்றனர்.