districts

img

ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை இருமடங்காக அதிகரிப்பு

சேலம், மே 19- சேலம் மாவட்டம் ஏற்காட்டில், வார விடுமுறையான ஞாயிறன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சேலம் மாவட்டம், ஏற்காடு பிர சித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற் றுலாப் பயணிகள் வந்து செல்கின்ற னர். வார விடுமுறையான ஞாயி றன்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் தங்கும் விடுதி கள் நிரம்பி உள்ளன. சுற்றுலாப் பய ணிகள் ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். குளுமையான கால நிலையால் மகிழ்ச்சி அடைந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளி யூர் நீர்வீழ்ச்சி மற்றும் மான் பூங்கா  உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர். லேடீஸ் மற்றும்  ஜென்ட்ஸ் சீட் பகுதியில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் குவிந்துள்ள தால், ரவுண்டானா பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனி டையே ஏற்காட்டில் நடப்பாண்டு 47 ஆவது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வரும் மே 22 முதல் மே 26 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடை பெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்விழாவில் பல் வேறு வகையான விளையாட்டு போட்டிகள், சமையல் போட்டி, படகு போட்டி நடைபெற உள்ளது. ஏற்காட் டிற்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல 40 சிறப்பு பேருந்துகள் இயக் கப்படவுள்ளன. இருமடங்காக அதிகரிப்பு உதகை, கொடைக்கானல் சுற்று லாத் தலங்களில் இ-பாஸ் இருந்தால் தான் சுற்றுலாப் பயணிகள் அனு மதிக்கப்படுகின்றனர். இதனால் உதகை, கொடைக்கானலில் சுற்று லாப் பயணிகளின் வருகை வெகு வாக குறைந்துவிட்டது. இதனால் இந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்களுக்கு செல்ல சுற்றுலாப் பய ணிகள் அதிக ஆர்வம் காட்டி வரு கின்றனர். அதன்ஒருபகுதியாக ஏழை களின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு மற்றும் மேட்டூர் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிக ளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஏற்காட்டிற்கு வரும் சுற் றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2  மடங்காக அதிகரித்துள்ளது. வழக்க மாக சனி, ஞாயிறு மற்றும் அரசு விடு முறை நாட்களில் சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் சுற்றுலாப் பயணி கள் வருவார்கள். தற்போது சராசரி யாக 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கி;ன றனர்.

;