districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்புகள்

ஈரோடு, செப்.24- கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக் கள் நலக்குழுவின் சார்பில் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4க்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு கள் கோபியில் நடத்தப்படுகின்றன. போட்டித்தேர்வில் வென்று அரசு பணியில் இருப்பவர்களும், கல்லூரி பேராசி யர்களும், முற்போக்கு சமுதாயப்பார்வை கொண்டவர்க ளும் வகுப்புகளை நடத்துகின்றனர். மாணவர்களின் சந்தே கங்கள் மற்றும் கேள்விகளுக்கு ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெறும் வாய்ப்புள்ளது. இடையிடையே தேர்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெறும். பயிற்சியில் சேர  ஞாயிறுதோறும் காலை 9.30  மணி முதல் கோபி பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள (பாஷா டியூசன் சென்டர்)  பயிற்சி மையத்தில் விண்ணப்ப படிவம் கிடைக்கும். விண் ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு கட்டணம் ரூ.100 மட்டும்  பொறுப்பாளரிடம் அளித்து பயிற்சியில் சேரலாம். பாஸ் போர்ட் அளவு புகைப்படும் இணைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9443019800, 9003386691,  9780655786 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஊராட்சி பணிகளுக்கு லஞ்சம் கேட்கும் மேலூர் துணை தலைவர்: வீடியோ வைரல்

உதகை, செப்.24- ஊராட்சி பணிகளுக்கு 3 சதவிகித கமிஷன் கொடுத்தால்தான் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என ஒப்பந் ததாரர்களிடம் மேலூர் ஊராட்சி துணை  தலைவர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் 35 ஊராட்சிகள் உள் ளன. இதில், குன்னூர் ஊராட்சி ஒன்றி யத்தில் மேலூர், பர்லியார், வண்டிச் சோலை, உபதலை, பேரட்டி, எடப் பள்ளி 6 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில், மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் நாகராஜ், ஒப்பந்த தாரர்களிடம் அதிகாரிகளுக்கு கொடுக் கும் கமிஷன் சதவிகிதத்தை விளக்கி பேசுவதுபோல் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி வைரலாக பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  அந்த வீடியோவில், மேலூர் ஊராட்சி துணை தலைவர் கூறுகை யில், ஊராட்சியில், ரூ.20 லட்சம், ரூ.50 லட்சம் போன்ற கட்டுமான பணிகளுக்கு 3 சதவிகித கமிஷன் கொடுக்க வேண் டும் என்று ஒப்பந்ததாரர்களை வற்பு றுத்தியுள்ளார். அதற்கு ஒப்பந்ததாரர் கள் ஏற்கனவே பொறியாளருக்கு 5 சத விகிதமும், மேற்பார்வையாளர்க ளுக்கு 12 சதவிகிதமும், பிடிஒ, கணினி பிரிவு உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் கமிஷன் கொடுத்த பிறகு தான் பில்  தொகையை பெற போவதாக துணைத் தலைவரிடம் கூறுகின்றனர். இதற்கு துணை தலைவர், அதி காரிகளுக்கு மாத சம்பளம் வருகிறது. ஆனால், நாங்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை ஒவ்வொரு முறையும்  நிதி கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ள தால், 3 சதவிகித கமிஷனை கட்டா யம் கொடுத்தால்தான் அடுத்த முறை பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்ப டும் என்கிறார். இதற்கு ஒப்பந்ததா ரர்கள் பதில் கூறுகையில், அதிகாரிகள் தான் ரசீதுகளுக்கு பணம் ஒதுக்குகின்ற னர் என்று கூறும் போது, அப்படியா னால் நானும் செக் வைக்கட்டுமா? என்று துணைத்தலைவர் கூறுகிறார். இது குறித்து துணை தலைவர் நாகராஜிடம் கேட்டபோது, 6 மாதத்திற்கு முன் எடுக் கப்பட்ட வீடியோ அது. அதில் நான் பேசி யதை யாரோ எடிட் செய்து மாற்றி வெளி யிட்டு உள்ளனர், என்றார்.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேலூர் துணைத் தலைவர் நாகராஜன் கார் எரிக்கப்பட்டது. மேலும், மேலூர் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் என்ஜினீயர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் நெருக் கடி கொடுப்பதாக கூறி மேலூர் ஊராட்சி தலைவர் விஷம் குடித்து தற்கொ லைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.

ரயில்கள் ரத்து

கோவை, செப்.24- தியோபாகல் – பார்பலி இடையே பொறியியல் பரா மரிப்புப் பணிகள் நடைபெறு கிறது. இதனால் செப்.25 ஆம் தேதி (இன்று) மற்றும் செப்.29 ஆம் தேதிகளில் டாடா நகரில் இருந்து புறப்பட்டு திருப்பூர், போத்தனூர் வழியாக எர்ணா குளம் செல்லும் டாடா நகர் -  எர்ணாகுளம் விரைவு ரயில்  (எண்: 18189) ரத்து செய்யப் பட்டுள்ளது. இதேபோன்று எர்ணாகுளம் - டாடா நகர் விரைவு ரயில் (எண்:18190) செப்.28 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

கோவை, செப்.24- கோவை மாவட்டத்தில் ஞாயிறன்று (இன்று) 1530 இடங்களில் மையங்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது. இதில், கிராமப்புறங்களில் 1081 முகாம்களும், மாநக ராட்சி பகுதிகளில் 340 முகாம் களும், நகராட்சி பகுதிகளில் 109 முகாம்களும் நடத்த திட் டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்க ளுக்கு முதல் தவணை தடுப் பூசி 105 சதவிகிதம் பேருக் கும், 2 ஆவது தவணை தடுப் பூசி 97 சதவிகிதம் பேருக்கும்  செலுத்தப்பட்டுள்ளது. இதே போன்று 15 - 18 வயதிற்குட் பட்ட சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 91 சதவிகி தம் பேருக்கும், 2 ஆவது தவணை தடுப்பூசி 77 சதவிகி தம் பேருக்கும் செலுத்தப்பட் டுள்ளது. 2 - 14 வயதிற்குட் பட்ட சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 89 சதவிகி தம் பேருக்கும், 2 ஆவது தவணை தடுப்பூசி 67 சதவிகி தம் பேருக்கும் செலுத்தப்பட் டுள்ளது. மேலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 29 சத விகிதம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி

அவிநாசி, செப். 24 – அவிநாசி அருகே குட்டைகளில் வண்டல் மண் எடுக்க விவ சாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், தத்தனூர், வேட்டு வளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில், குட்டைகள் அமைந்துள் ளன. காலப்போக்கில் குட்டைகள் தூர்வாரப்படாமல், வண் டல் மண் படிந்துள்ளதால் மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தத்தனூர் ஊராட்சியில், பூசாரி  நாயக்கன் குட்டை, அரசங்காடு குட்டை, புங்கன் குட்டை,  வேட்டுப்பாளையம் ஊராட்சியில் அ. குரும்பபாளையம் குட்டை உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அனுமதி  அளித்துள்ளது.  இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச்  செயலாளர் எஸ்.வெங்கடாசலம் கூறுகையில்இ விவசாயிக ளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதித்துள்ள மாவட்ட நிர்வா கத்திற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,  அதேபோல வருவாய்த்துறை கூடுதல் கவனிப்போடு, வரு வாய் ஈட்டும் நோக்கத்தோடு மண்ணெடுக்கும் நபர்களை  தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகள் மட்டுமே முழுமை யாக பயன்பெறும் வகையில், வழிகாட்டல் தர வேண்டும். விவ சாயிகள் வருவாய்த் துறையை அணுகி தங்கள் நிலத்திற்கு  தேவையான வண்டல் மண்ணை எடுத்து பயன்பெறுமாறும்  கேட்டுக் கொள்கிறோம். அதேபோல இரண்டு வருடங்க ளுக்கு முன்பு இப்பகுதிகளில் முறைகேடாக மண்ணெடுப் பது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. எனவே மாவட்ட  நிர்வாகம் கூடுதல் கவனிப்போடு  செயல்பட வேண்டுமென  வலியுறுத்துவதாக கூறினார். இது குறித்து கோட்டாட்சிய ருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  மனு அளித் துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

19 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் திருட்டு

அவிநாசி, செப்.24–  அவிநாசி அருகே சேவூரில் பட்டப்பகலில் அரசு அலுவ லர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ. 45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை  அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றனர். சேவூர், சந்தைப்பாளையம் கொங்கு நகரைச் சேர்ந்தவர்  ஜின்னா (44). அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் எழுத்தராக பணி யாற்றி வருகிறார். இவரது மனைவி அஷ்ரப் நிஷா (35). பல்ல டம் வட்டம், கரைப்புதூரில் கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு அணீஸ் (18) என்ற மக ளும், ஆர்பாத் (13) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில்,  தம்பதியர் வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல பணிக்கு  சென்று விட்டனர். பள்ளிக்குச் சென்ற மகன் அர்பாத் மாலை  5 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன் கதவு உடைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டிற்கு வந்த  ஜின்னா உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்தி ருந்த 19 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் ரூ.45 ஆயி ரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. தகவ லின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து சேவூர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

திருப்பூரில் இன்று வாலிபர் சங்கம் சார்பில்  போதை எதிர்ப்பு பிரச்சார இயக்கம்

திருப்பூர், செப். 24 - மாவீரன் பகத்சிங்கின் 115 ஆவது பிறந்த  தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 25ஆம் தேதி  (ஞாயிற்றுக்கிழமை) இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் சார்பில் திருப்பூரில் போதை  எதிர்ப்பு பிரச்சார இயக்கமும், சங்கப் பெயர்ப்  பலகைகள் திறப்பு விழாவும் நடைபெறுகி றது. தமிழகத்தில் இளைஞர்கள், இளம் பெண் களின் வாழ்வை நாசப்படுத்துவதுடன், உழைப்பாளி குடும்பங்களை சீரழித்துக் கொண்டிருக்கும் போதை கலாச்சாரத்திற்கு எதிராக செப்டம்பர் 25ஆம் தேதி திருப்பூர் மாநகரப் பகுதிகளில் போதை எதிர்ப்புப் பிரச்சார இயக்கம் நடத்தப்படுகிறது.  அத்துடன் 30 இடங்களில் வாலிபர் சங்கப்  பெயர் பலகை திறப்பு விழாவும், 35க்கும் மேற் பட்ட இடங்களில் கொடியேற்ற நிகழ்வுகளும்  நடைபெறுகிறது.  இந்த பிரச்சார இயக்கம் ஞாயிறு காலை 9  மணிக்கு தியாகி  பி.எஸ்.சுந்தரம் (ஊத்துக் குளி) சாலை பாரப்பாளையத்தில் தொடங்கு கிறது. நாள் முழுவதும் நகரின் பல்வேறு பகுதி கள் வழியாக செல்லும் இந்த பிரச்சார இயக் கத்தினர் மாலை வாலிபர் சங்கத்தின் மாவட் டக்குழு அலுவலகம் முன்பாக நிறைவு செய் கின்றனர். இலவச மருத்துவ முகாம் திருப்பூர் குமரானந்தபுரம் கஸ்தூரியம் மாள் திருமண மண்டபத்தில் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் குமரானந்தபுரம் வடக்கு கிளையும், ஸ்ரீ குமரன் மருத்துவம னையும் இணைந்து இலவச பொது மருத்துவ  முகாம் மற்றும் ரத்த வகை கண்டறியும் முகாமை நடத்துகின்றனர். வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலா ளர் ஏ.வி.சிங்காரவேலன் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.

திருப்பூரில் தீவிர வாகன சோதனை

திருப்பூர், செப். 24 - கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்க ளில்  நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் கல் வீச்சு  சம்பவங்களைத் தொடர்ந்து திருப்பூரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகரில் இது போன்ற அசம்பாவித சம்பவங் களை தவிர்க்கும் வகையில் மாநகருக்குள் நுழையும் வாக னங்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வரு கின்றன. திருப்பூர் மாநகரின் மங்கலம் சாலை, பல்லடம் சாலை  மற்றும் அவிநாசி சாலை வழியாக திருப்பூருக்குள் வரும் வாக னங்கள் மாநகர காவல் துறை சார்பில் தடுப்புகள் வைத்து, தீவிர சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர். இதனால்  நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற் பட்டது.

இலவச பயிற்சி வகுப்பு

திருப்பூர், செப். 24 - திருப்பூர் அனுப்பர்பாளையத்திலுள்ள கனரா வங்கியின்  கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் “இல வச போட்டோ கிராஃபி மற்றும் வீடியோ கிராஃபி  பயிற்சி  வகுப்பு கிராமப்புறத்தில் வசிக்கும், வறுமைக் கோட்டிற்கு கீழ்  உள்ளோருக்கு நடத்தப்படுகிறது. வரும் (26) திங்களன்று நேர்காணல் நடைபெறும். எழுத படிக்கத் தெரிந்த, 18 முதல் 45  வயதுக்குட்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி  கட்டணம் இல்லை.தொலைபேசி : 0421-2256626, 9952518441,  8610533436. ஆன்லைன் முன்பதிவிற்கு https://tinyurl. com/y7t7cfqo.

3.36 லட்சம் பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை - தருமபுரி ஆட்சியர் தகவல்

தருமபுரி, செப்.24- தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 36 ஆயிரத்து  739 குடும்பங்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சி யர் கி.சாந்தி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி, மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்  சிறந்த முறையில் பணியாற்றிய 5 காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப் பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் இக்காப்பீட்டு  திட்டத்தில் இலவசமாக சிறப்பு சிகிச்சை பெற்று, நலம் பெற்ற  5 பயனாளிகளுக்கு பரிசுகளையும் வழங்கி பாராட்டி, 10 பய னாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகளையும் வழங்கி னார். மேலும், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் இந்த நான்கு ஆண்டு களில் ரூ.63.97 கோடி மதிப்பீட்டில் 37 ஆயிரத்து 217 நோயாளி களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, குணமடைந்துள்ளனர். மாவட் டத்தில் இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 3 லட்சத்து 36 ஆயி ரத்து 739 குடும்பங்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு அட்டை கள் வழங்கப்பட்டுள்ளது, என ஆட்சியர் கி.சாந்தி தெரிவித் தார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா  விஜயன், அரூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வி.கிருஷ்ணமூர்த்தி, முதல் வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட திட்ட அலு வலர் கே.செந்தில்நாதன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

கொள்ளை போன 30 பவுன் நகை மீட்பு

கோவை, செப்.24- கோவையில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டவரை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 30 பவுன் நகை களை மீட்டனர். கோவை மாவட்டம், சரவணம்பட்டியை அடுத்த சங்கரா  நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (47).  இவர் குடும்பத்துடன் உற வினர் திருமணத்துக்காக கடந்த செப்.7 ஆம் தேதி வெளியூர் சென்றார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த செல்லம்மாள் என்பவரும், தனது நகை பையை பாதுகாப்பாக வைத்திருக்க, சிவக்குமாரிடம் கொடுத்துள்ளார். இதன்பின் அந்த பையை சிவக்குமார், செல்லம்மாளிடம்  திருப்பி கொடுத்துள்ளார். அதில் நகை இல்லை என செல்லம்மாள்  அவரிடம் கூறினார்.  இதனால் சந்தேகமடைந்த சிவக்குமார் உடனே வீட்டில் உள்ள  பீரோவை திறந்து  அதில் வைத்திருந்த தங்களது மற்ற நகை கள் இருக்கிறதா என பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தார். இதுகுறித்து சிவக்குமார் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அப்புகாரின் பேரில் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல் துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா  காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், சிவகங்கை  மாவட்டம், உத்திரகோச மங்கையை  சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (43) என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. மேலும், அவர் கோவை வந்து மணியகாரம் பாளையம் இளங்கோ நகரில் தங்கி டிரைவராக வேலை செய்து வந்ததும், ஏற்கனவே அவர் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறை சென்று வந்ததும் தெரியவந்தது. இதை யடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடமி ருந்து 30 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் முன்நிறுத்தி, சிறையில் அடைத்தனர்.

கதர் கிராம தொழிலாளர்கள் ஊதிய பேச்சுவார்த்தை

ஈரோடு, செப்.24- கதர் கிராம தொழிலாளர்களின் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை ஈரோட் டில் நடைபெற்றது. தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் கடந்த 2013 ஜூலை முதல் கதர் கிராம தொழில் வாரிய தொழிலாளர்களுக்கு அரசு கடைநிலை ஊழி யர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு வழங்கும் தொகை ரூ.4 ஆயிரத்தை 10 ஆயிர மாக உயர்த்தி வழங்கிட வேண்டும். பொங்கல் பரிசு தொகை வாரிய பணியாளர்களுக்கு வழங்குவது போல் சோப்பு அலகு பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை கதர்த்துறை அரசு முதன்மை செயலாளரிடம் எழுப்பியது.  இதனையடுத்து கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்கு நர் கு.விஜயகுமார், கைமுறை காகித அலகுகள் தொடர்ந்து  நட்டத்தில் இயங்குகின்றன. அலகுகளில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு தீர்வு காணும் பொருட்டு ஈரோடு உதவி இயக்கு நர் அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி சங்கத்தின் பொதுச்செயலாளர் ஏ.கிருஷ்ண மூர்த்தி, செண்பகபுதூர் கே.ராஜேந்திரன், பிடாகம் பி.முருகே சன் மற்றும் கோவனூர் பி.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையில், தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய பணிக்கொடை உள்ளிட்ட பணப் பயன்கள் மற்றும் விருப்பத்தை தெரிவிக்கும் பட்சத்தில் அர சின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காணப்படும் நிர்வாகத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அடிப்படை ஊதியம் ரூ.5587 ஆக வழங்க வேண்டும். அக விலைப்படி அரசாணைப்படி ரூ.5032 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மூடப்பட்ட அலகுகளின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 65 விழுக்காடு நிலுவைத் தொகை வழங்க வேண்டும். நிரந்தர தீர்வு காணும் பட்சத்தில் 3 மாதத்திற்கு சட்டப்படியான அறிவிப்பு ஊதியம் வழங்க வேண்டும். பணிக்காலத்திற்கும், எஞ்சிய பணிக்காலத்திற்கும் பணிக் கொடை கணக்கிட்டு வழங்க வேண்டும். வருங்கால வைப்பு  நிதிக்கு வாரிய பங்குத்தொகை செலுத்திட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டன. இப்பேச்சு வார்த்தையில் நிர்வாகத் தரப்பில் மதுரை மண்டல துணை இயக்குநர், மைய அலுவலக உதவி இயக்குநர் (வணிகம்), ஈரோடு உதவி இயக்குநர் மற்றும் செண்பகப்புதூர் கைமுறை காகித அலகு கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செந்நாய்கள் தாக்கியதில் 3 மாடுகள் படுகாயம்

உதகை, செப்.24- மார்லிமந்து அணை பகுதியில் செந்நாய்கள் தாக்கியதில் 3 மாடுகள் படுகாயம் அடைந்தன. இதுகுறித்து வனத்துறை யினர் ஆய்வு செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், கோத்தகிரி மற் றும் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் யானை, சிறுத்தை,  கரடி, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட பல்வேறு  வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் தீவனப் பற்றாக்குறை, அதிகரித்து வரும் கட்டிடங்களால் வனப்பகுதி பரப்பளவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவு தேடி  குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாகி விட்டது. இந் நிலையில், உதகையை அடுத்த மார்லிமந்து அணை பகுதி யில் வனவிலங்குகள் வேட்டையாடியதில் 3 மாடுகள் படுகா யம் அடைந்துள்ளன. இதுகுறித்து மாடுகளின் உரிமையாளர் கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் வனவிலங்குகளால், கால்நடைகள் அடிக்கடி வேட்டையாடப் படுகின்றன. இவ்வாறு கால்நடைகளை தாக்கும் வனவிலங்கு கள் கால்நடைகள் கிடைக்காத நேரங்களில் மனிதர்களை  தாக்க முயற்சி செய்யும். எனவே இந்த பிரச்சனைக்கு வனத் துறையினர் தீர்வு காண வேண்டும், என்றார். இதைத்தொ டர்ந்து உதகை வனச்சரகர் ரமேஷ் தலைமையிலான வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசா ரணை மேற்கொண்டனர்.


 

 

;