districts

img

பொருளாதார நெருக்கடி ஓ.ஈ. மில்களுக்கு ஆதரவாக திருப்பூர் பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரிகள் வேலை நிறுத்தம்

திருப்பூர், ஜூலை 17 - கழிவு பஞ்சு மற்றும் கழிவுத் துணிக ளில் இருந்து நூல் தயாரிக்கும் ஓ.ஈ. மில் கள் பொருளாதார நெருக்கடி காரண மாக உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள் ளார். இந்த மில்களுக்கு கழிவுப் பஞ்சு சப்ளை செய்யும் திருப்பூர் பனியன் கட் டிங் வேஸ்ட் வியாபாரிகள், அவர்க ளுக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தை  தொடங்கியுள்ளனர். திருப்பூர் பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரிகள் திங்கள்கிழமை முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.திருப்பூரில் பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரிகள் 85க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் பனியன் கட்டிங் வேஸ்ட் துணியில் இருந்து நிறம் வாரி யாக சிறு, சிறு துணியைப் பிரித்து, அதை  மொத்தமாக வாங்கி, ஓ.ஈ. மில்களுக்கு  சப்ளை செய்யும் வியாபாரம் செய்து வருகிறார்கள்.  திருப்பூர் டூம் லைட் மைதானம், நெசவாளர் காலனி, மங்க லம் பகுதிகளில் இருந்து பனியன் கட்டிங்  வேஸ்ட் பிரிக்கப்பட்ட துணிகளை  ஓ.ஈ.  மில்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். நாளொன்றுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவுத் துணிகளை ஓ.ஈ. மில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகி றது. இந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஓ.ஈ. மில்கள் கடந்த வாரம் உற்பத்தி நிறுத்தத்தை தொடங்கினர்.  இந்நிலையில்  ஓ.ஈ. மில்கள் உற் பத்தி நிறுத்தத்துக்கு ஆதரவு தெரி வித்து திருப்பூர் பனியன் கட்டிங் வேஸ்ட்  வியாபாரிகள் சங்கத்தினர் திங்கட்கி ழமை முதல் வருகிற 19ந் தேதி வரை 3  நாட்கள் தொடர் வியாபார நிறுத்தம் மற்றும் வேலை நிறுத்தம் செய்வதாக முடிவு செய்து அறிவித்துள்ளனர். இந்த  வேலைநிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு பல லட்சம் ரூபாய்  மதிப்பிலான வர்த்தக இழப்பு ஏற்படுவ துடன், கணிசமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.