திருப்பூர், செப். 4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய பகுதியில் தோழர் பி.ஆர். நினைவக கட்டிட நிதியாக ரூ.40 ஆயிரத்து 600 வழங்கப்பட்டது. திருப்பூர் தெற்கு ஒன்றிய பகுதியில் ஞாயி றன்று கட்சியின் மாநில குழு அலுவலகம் கட்டிட நிதிக்காக கட்சி உறுப்பினர் சந்திப்பு நிகழ்ச்சி பெரியாண்டிபாளையம், குளத்து புதூர், ஜெய்நகர், ராக்கிய பாளையம், ஆர்.வி.நகர், வள்ளியம்மை நகர், நல்லூர், விஜயாபுரம், செரங்காடு ஆகிய 10 கிளைகளில் நடைபெற்றது. கட்சி உறுப்பினர்கள் கட்டிட நிதிக்காக ரூ. 40,600-ஐ கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சி. மூர்த்தி, கமிட்டி உறுப்பினர்கள் சி.சுப்பிர மணியம், எஸ்.குணசேகர், கிளை செயலா ளர்கள் டி.துரைசாமி, தங்கமுத்து, ராமசாமி, பி.ரமேஷ், கே.ஈஸ்வரன், ஜி.ராஜன், பரிமளம், கருப்புசாமி மற்றும் கட்சி உறுப் பினர்கள் கலந்து கொண்டனர்.