கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட கல்வித்துறை சார்ந்த மூன்றடுக்கு குழு கூட்டம், ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் ஸ்வேதா சுமன், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.