districts

img

சாலையோர டீக்கடைக்குள் லாரி புகுந்து விபத்து ஓட்டுநர் உட்பட மூவர் பலி; ஐவர் படுகாயம்

தாராபுரம், ஜூலை 20 - திருச்சியில் இருந்து சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி  தாராபுரம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை யோர டீக்கடைக்குள் புகுந்ததில் மூன்று பேர் பலியாகினர். ஐந்து பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்ற னர். தாராபுரத்தை அடுத்த சூரியநல்லூர் பகுதியில் கலா மணி என்பவர் சாலையோரம் டீக்கடை நடத்தி வருகிறார். சம்ப வத்தன்று சிமெண்ட் கலவை லோடு ஏற்றி வந்த லாரி திருச்சி யிலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கலாமணியின் டீக்கடைக்குள் புகுந்தது விபத்துக்குள் ளானது.  இந்த விபத்தில் கடையில் பணியாற்றி வந்த முத்துச்சாமி  (62) மற்றும் குப்பன் (70) இருவரும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் லாரி ஓட்டுநர் ரத் தினகுமார் (28) தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார். மேலும் டீக்கடையில் அமர்ந்திருந்த தாராபுரத்தை அடுத்த நந்தவனம்பாளையத்தைச் சேர்ந்த  மகேந்திரன் (20), சூரியநல்லூரை அடுத்த குப்பண்ணம்பா ளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (67), செல்லமணி  (64), முத்துச்சாமி (60), சூரியநல்லூர் பகுதியை சேர்ந்த  மாணிக்கம் (46) ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை  அக்கம் பக்கத்தினர் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவம னைக்கு  அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி  அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக கோவை மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இச்சம்பவம் குறித்து குண்டடம் போலீசார் சம்பவ இடத் தில் ஆய்வு செய்தும், விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.