districts

img

“ என் வாழ்க்கைப் பாதையில் பதிந்த சுவடுகள் “ நூல் வெளியீட்டு விழா

உடுமலை, டிச.5-  உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர்  தி.குமாரராஜா எழுதிய “ என் வாழ்க்கைப் பாதை யில் பதிந்த சுவடுகள் “  நூல் வெளியீட்டு விழா ஞாயி றன்று ஜி.வி.ஜி. கலையரங்கில்  நடைபெற்றது.   உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர்  தி.குமாரராஜா எழுதிய “ என் வாழ்க்கைப் பாதையில் பதிந்த சுவடுகள் “ என்ற புத்தக வெளி யீட்டு விழா ஞாயிறன்று ஜி.வி.ஜி. கலையரங்கில்  மக்கள்  பேரவையின் தலைவர் யு.கே.பி.முத்துக் குமாரசாமி  தலைமையில் நடைபெற்றது. இந்த புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் ஜி.வி.ஜி. கல்வி நிறுவ னங்களின் தாளாளர் ரவீந்திரன் கெங்குசாமி புத்தகத்தை வெளியிட மக்கள் பேரவை ஒருங் கிணைப்பாளர் சிவசண்முகம் பெற்றுக்கொண்டார். மேலும் பி.சி. ராஜ்  ஆரண்யா அறக்கட்டளை நிறுவனர் நந்தினி ரவீந்திரன், வித்யாசாகர்கல்விக் குழு மங்களின் தாளாளர் பத்மாவதி சத்தியநாதன்,  காந்தி  கலா நிலையக் கல்வி நிலையத்தின் தாளாளர்  திரு மலைசாமி மற்றும்  100 வயதைத் தொட்ட குமார ராஜா, ஆசிரியர் லட்சுமி ஆகியோரும் சிறப்பு அழைப்பா ளர்களாகக் கலந்து கொண்டனர். நிறைவாக நூலின் ஆசிரியர் குமாரராஜா பேசினார். தொடர்ந்து, திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனா திபதி,  முன்னாள்  ஆட்சியர் கோட்டுர் விஜயகுமார், சென்னை மணிமேகலை பிரசுரத்தின்  தாளாளர் ரவி  தமிழ்வாணன் என  பத்திற்கும் மேற்பட்டோரின் நேரடி காணொலி வாழ்த்துரையும் நடைபெற்றது.