- வே.தூயவன் சிறு, குறு நடுத்தரத் தொழில் துறையினருக்கு ஆர்டர் தரக்கூடியவர்கள் 45 நாட்களுக்குள் பில் தொகை தர வேண்டும் என்று இடைக்கால பட் ஜெட்டில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது இது எந்த அளவுக்கு நன்மை அளிக்கும் என்பது கேள் விக்குறியாக உள்ளது. நடைமுறையீல் இது தொழில் துறைக்கு இன்னும் நெருக்கடியை அதி கரிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் உற்பத் தியாளர் தரப்பில் கூறப்படுகிறது. திருப்பூர் பின்னலாடைத் துறையைப் பொறுத்தவரை நிட்டிங், டையிங், காம்பேக்டிங் என அடுத்தடுத்து சங்கிலித் தொடராக பல்வேறு ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகள் அனைத்தும் சிறு, குறு, நடுத்தர நிறுவன வரம்புக்குள் வரக்ககூடியவை. பிரதானமாக பின்னலாடை உற்பத்தியாளர்களி டம் ஜாப் ஒர்க் செய்து கொடுத்து அதற்கான கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியவர்க ளாக இந்த நிறுவனங்கள் உள்ளன. எம்எஸ்எம்இ எனப்படும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் அமைச் சகத்தில், உற்பத்தி அல்லது சேவை ஆர்டர் தரக் கூடிய நிறுவனங்கள் 15 நாட்களில் இருந்து 45 நாட்களுக்குள் பில் தொகையை வழங்க வேண் டும் என்று ஏற்கெனவே விதிமுறையில் கூறப்பட் டுள்ளது. எனினும் தற்போது செய்திருக்கும் மாற் றம் என்னவென்றால், குறிப்பிட்ட 45 நாட்களுக் குள் பில் தொகையை எம்எஸ்எம்இ நிறுவனங்க ளுக்குத் தராவிட்டால், ஆர்டர் தரக்கூடிய நிறுவ னங்களின் லாபக் கணக்கில், நிறுத்தி வைத்தி ருக்கும் பில் தொகையையும் சேர்த்து கணக்கில் வைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறு வனங்கள் பெரு நிறுவனங்களைச் சார்ந்து இயங்கக்கூடியவை. தொழில் நிலைமை நன் றாக இருந்தசமயம் 45 நாட்கள் காலக்கெடுவில் பில் தொகையை அவர்கள் கொடுத்து வந்த னர். மேலும் ஆர்டர் தரக்கூடிய பெரு நிறுவனங் களுக்கும், சிறு, குறு தொழில் துறையினருக்கும் இடையே புரிந்துணர்வு அடிப்படையில் 60 நாட் கள், 90 நாட்கள் என்ற கால அளவில் கூட பில் தொகையை கொடுத்து விடக்கூடிய நிலையும் இருந்தது. ஆனால் தொழில் நிலைமை கடும் நெருக் கடியைச் சந்திக்கும் நிலையில், பெரிய நிறுவ னங்கள் நெருக்கடியின் சுமையை சிறு, குறு நிறுவனங்கள் மீது மடை மாற்றி பில் தொகையை தருவதற்கு இன்னும் கூடுதல் காலதாமதம் செய் யும் நிலை ஏற்பட்டது. திருப்பூர் ஜாப் ஒர்க் நிறுவ னங்களைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுக ளாக, இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமா னால் மோடி அரசின் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி நடைமுறைக்குப் பிறகுதான் ஜாப் ஒர்க் பணிக்கு பில் தொகை தருவதில் இழுத்தடிக்கும் நிலை ஏற்பட்டது. அதேசமயம் ஜிஎஸ்டி கணக்கில் தொகை செலுத்துவதிலும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங் களுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. குறிப்பாக ஜாப் ஒர்க் செய்து கொடுத்ததற்கு பிரதான நிறுவ னங்களிடம் இருந்து பணம் வரவாகாவிட்டாலும், ஜிஎஸ்டி கணக்கில் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நெருக்கடியினால் கணிசமான நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன.
நிறுவனங்களுக்கு இடையிலான வரவு செல வில் காலதாமதம் ஆனாலும், நெருக்கடிக்கு இடையிலும் நீண்ட காலதாமதம் ஆனாலும் எப்ப டியோ தொழில் செய்கிறோம் என்று சிறு, குறு தொழில் துறையினர் கூறுகின்றனர். இந்த நிலையில் தற்போது 45 நாட்களுக்குள் பில் தொகை தர வேண்டும் என்ற உத்தரவு ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி அளிப்ப தாக ஜாப் ஒர்க் சங்கங்கள் பொதுவாக வர வேற்புத் தெரிவித்திருக்கின்றனர். அதேசமயம் என்னதான் அரசாணை, உத்த ரவு போட்டாலும் நடைமுறையில் ஆர்டர் வழங் கும் நிறுவனங்கள், அதைச் சார்ந்து இயங்கும் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு இடையே பில் தொகை விசயத்தில், உத்தரவுப்படி நடைபெறு வதற்கு வாய்ப்பில்லை என்றும் ஒரு பகுதி தொழில் துறையினர் கூறுகின்றனர். பிரதான உற்பத்தி நிறுவனங்களைச் சார்ந்து தான், சிறு, குறு தொழில் துறையினர் இயங்கி ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே பிரதான நிறுவனங்களின் நடைமுறையை அணுசரித்துத்தான் சிறு, குறு நிறுவனங்கள் இயங்க முடியும். இல்லாவிட்டால் பெரு நிறுவ னங்கள் அவர்களுக்கு ஏற்ற சிறு, குறு நிறுவனங் களை பணிக்கு அமர்த்திக் கொள்வார்கள். எனவே இந்த உத்தரவு நடைமுறைக்கு வருவதற் கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று தெரிவித்த னர்.
ஒன்றிய அரசு, ஜிஎஸ்டி வருவாய் விசயத்தில் ஏராளமான சிறு, குறு நிறுவனங்கள் வரி செலுத் தாமல் அல்லது தாமதமாக செலுத்தக்கூடிய நிலையை மாற்றுவதற்காக, ஆர்டர் தரும் நிறுவ னங்கள் பில் தொகையை குறித்த காலத்திற்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டதாகக் கூறப் படுகிறது. ஆனால் இது வெளிப்படையாக நல்ல நடவடிக்கை என்பது போல் தோன்றினாலும், அடிப்படையில் சிறு, குறு நிறுவங்களுக்கு நெருக்கடியையும், அழுத்தத்தையும் ஏற்படுத் தக்கூடியதாகத்தான் இருக்கும் என்று தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர். ஆரம்பத்தில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி முறை என ஒன்றிய அரசு மேற்கொண்ட ஒவ் வொரு நடவடிக்கையும் தொழில் துறைக்கு நல்லது போல்தான் தெரிந்தது. இந்த தொழிலில் இருப்பவர்களும் வரவேற்றனர். கடைசியில் அவர்களுக்கே பாதகமாக இருந்தது அனுப வம் உணர்த்தியது. அதுபோல் இந்த விசயமும் இருக்கக்கூடும் என்று சிலர் ஐயம் தெரிவித்த னர். ஒன்றிய அரசு கார்ப்பரேட் ஆதரவு நிலைபாட் டில் தீவிரமாக செயல்படும் நிலையில், சிறு, குறு தொழில் துறையைப் பாதுகாக்க என்று சொல் வது நம்பும்படியாக இல்லை. நிகழ்வுப் போக்கில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நெருக்கடிக் குள் தள்ளப்பட்டு, அந்த வாய்ப்பையும் பெரு நிறு வனங்களே கைப்பற்றிக் கொள்வதாகத்தான் இது இருக்கும் என்றும் அனுபவத்தின் அடிப்ப டையில் தொழில் துறையினர் கூறினர். உண்மையில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்க ளைப் பாதுகாப்பதென்றால், மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுக்குள் வைப்பது, மின் கட்டண குறைப்பு, குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வசதியை உறுதி செய்வது, சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது ஆகிய அடிப் படை விசயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அது அல்லாமல், சிறு,குறு, நடுத்தர தொழில்முனைவோரின் கோரிக்கைகளை, அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்கு சாதகமாக ஒன்றிய அரசு சூழ்ச்சி செய்துள்ளது என்பதே தொழில்முனைவோரின் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும், மேம்போக்கான இதுபோன்ற நடவடிக்கைகள் கார்ப்பரேட் மயத் துக்கு சார்பாகவும், சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறைக்கு எதிராகவும் தான் சென்றடைகிறது, என்பதே உண்மை.