உதகை, செப்.13- மஞ்சூர் அருகே சுடுகாடுக்கு செல்ல நடைபாதை வசதி இல்லாததால் இறந்த வரின் உடலை எடுக்க மறுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. நீலகிரி மாவட்டம், மஞ்சூடி அடுத்த பெங் கால்மட்டம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியி ருப்புகள் உள்ளன. இதில் பெங்கால் மட்டம் சுடுகாடு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடம் சிலருக்கு வழங்கப்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த சுமார் 10 குடும்பங் கள் வீடு கட்டியுள்ளனர். இந்நிலையில் அந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் அருகிலிருந்த இடம் வழியாக உதகை, மஞ்சூர் உட்பட பல் வேறு இடங்களுக்கு பிழைப்பிற்காக சென் றுள்ளனர். இதனை தெரிந்து அந்த இடத்தை தனியார் ஒருவர் வாங்கி வழித்தடத்தை மறித்து வீடு கட்டியுள்ளார். இதனால், இம்மக் களுக்கு வழித்தடம் இல்லாமல் போயுள்ளது. தங்களுக்கு வழித்தடம் ஒதுக்கித் தர வேண் டும் என கடந்த பல ஆண்டுகளாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், திங்களன்று வயது மூப் பின் காரணமாக மனோகர் என்கிற சம்பத் உயிரிழந்து விட்டார். அவரது உடலை மயா னத்திற்கு எடுத்து வர வழியில்லாத நிலை யில், வீட்டில் இருந்து அவரது உடலை எடுக்க மறுத்து, நடைபாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி மனோகர் குடும் பத்தினர் மற்றும் உறவினர்கள் திடீரென உதகை - மஞ்சூர் சாலையில் மறியலில் ஈடு பட்டனர். இதற்கிடையே மயானத்திற்கு செல்ல வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்று போராடிய பொது மக்களுக்கு ஆதரவு தெரி வித்து அந்த பகுதி கடைகளும் அடைக்கப் பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் குந்தா வட் டாட்சியர் இந்திரா, காவல் துணை கண்கா ணிப்பாளர் விஜயலட்சுமி, குந்தா வருவாய் ஆய்வாளர் மணிமேகலை உள்ளிட்ட அதிகா ரிகள் பொதுமக்களிடம் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடி வில் பொதுமக்கள் சமாதானம் அடைந்த தால், தேயிலைத் தோட்டம் வழியாக மயானத் திற்கு சுற்றி செல்லும் வழியாக உடலை எடுத்து சென்று, அடக்கம் செய்தனர்.