districts

img

அரசு ஐடிஐ விடுதியில் அடிப்படை வசதி இல்லை ஏரியில் குளித்த கல்லூரி மாணவன் உயிரிழப்பு

சேலம், செப்.29- ஆத்தூர் அருகே ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் உயிரிழந் தார். மாணவன் இறப்புக்கு கல்லூரி விடுதியில் போதிய வசதிகள் இல்லா ததுதான் காரணம் என குற்றஞ்சாட்டி பெற்றோர் மற்றும் மாணவரின் உற வினர்கள் கருமந்துறை காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல் பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தருமபுரி மாவட்டம், சித்தேரி பகுதி யைச் சேர்ந்த வேடன் என்பவரது மகன் பிரவீன்குமார் (18), ஐடிஐ முத லாம் ஆண்டு பயின்று வந்தார். விடுதி யில் தங்கி கல்வி பயின்று வந்த நிலை யில், பிரவீன்குமார் குளிக்க விடுதி யில் சரியான வசதி இல்லாததால், சக மாணவர்களுடன் கல்லூரி பின் பக்கத்தில் உள்ள பெருஞ்சூர் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது  மாணவர் பிரவீன் குமார் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கியுள்ளார். நீரில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரவீன் குமாரை நண்பர்கள் காப் பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் பிர வீன் குமார் ஆழமான பகுதியில் சென்றதால் காப்பாற்ற முடிய வில்லை.  இதுகுறித்த தகவலின் பெயரில் கருமந்துறை தீயணைப்புத்துறை யினர் நிகழ்வு இடத்திற்கு சென்று உடலை மீட்டனர். ஐடிஐயில் மாண வர்கள் தங்குவதற்கு அடிப்படை வச திகள் இல்லை.

தொடர்ந்து இது சம் மந்தமாக அதிகாரிகளிடம் தெரிவித் தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மேலும், விடுதி காப்பாளர் மாட சாமி சரிவர பணிக்கு வராமல், மாண வர்களை கண்காணிக்க தவறியுள் ளார். மேலும் விடுதி சுற்றுசுவர் இல் லாத நிலை உள்ளது. மாவட்ட நிர்வா கத்தின் மெத்தன போக்கால் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார் என குற்றம்சாட்டி தகவலறிந்து வந்த மாணவனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் கருமந்துறை காவல் நிலையத்தின் முன்பு போராட்டத் தில் ஈடுபட்டனர்.  மேலும் இறந்த மாணவன் குடும் பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விடுதிக்கு அடிப்படை வசதிகள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களு டன் வாழப்பாடி காவல் துணை கண் காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர் உடலை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். முன்னதாக நடைபெற்ற போராட்டத் தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கருமந் துறை செயலாளர் பாக்கியராஜ், மலைவாழ் மக்கள் சங்க மாநிலப் பொருளாளர் ஏ.பொன்னுசாமி, செய லாளர் சின்னமணி, தர்மலிங்கம், வெங் கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

;