சேலம், ஜூலை 4- மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வ நாளேடும், உழைப்பாளி வர்க் கத்தின் பேராயுதமான தீக்கதிர் நாளி தழின் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிர மாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை பதிப்பிற்குட் பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் உதகை மாவட்டங்களில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட தலைவர்கள் இவ்வியக்கத்தில் ஈடு பட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக, சேலம் மேச் சேரி ஒன்றியத்தில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங், சேலம் மாவட்டச் செய லாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதேபோன்று, தருமபுரி மாவட் டத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் தீக்கதிர் தீவிர சந்தா சேர்ப்பு நடை பெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதி யாக தருமபுரி நகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சிசு பாலன், சோ.அருச்சுணன், வே.விசுவ நாதன், நகரசெயலாளர் ஆர்.ஜோதி பாசு ஆகியோர் சந்தா சேர்ப்பில் ஈடு பட்டனர். கோவை மாவட்டத்தில் தீவிர சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வரு கிறது. இதன்ஒருபகுதியாக கோவை வ.உ.சி மைதானத்தில் உள்ள சாலை யோர வியாபாரிகளிடையே தீக்கதிர் சந்தா சேர்க்கும் பணி நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.மனோகரன், சாலையோர வியாபாரிகள் சங்க செய லாளர் ராமு, தலைவர். கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.