கோவை, ஜூன் 2- கோவை மக்களுக்கு குடிநீர் ஆதார மாக விளங்கும் சிறுவாணி அணையில் இன்னும் 95 சென்டிமீட்டர் அளவுக்குத்தான் நீர்மட்டம் உள்ளதால், தண்ணீர் பற்றாக் குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கோவை, சிறுவாணி அணையின் நீர் மட்டம் அடிப்பகுதியை தொடும் அளவிற்கு குறைந்துள்ளது. இன்னும் 95 சென்டிமீட்டர் அளவிற்கு மட்டுமே குடிநீர் இருப்பில் உள்ளது. நாள்தோறும் 7 கோடி லிட்டர் குடி நீர் பெறப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் அளவைவிட குறைவாக எடுத்தால், குடி நீர் சப்ளை பகுதிக்கு பற்றாக்குறை அதிக மாகிவிடும். சிறுவாணி குடிநீர் திட்டத்தில் சுமார் 6 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது. ஏற்கனவே, சப்ளை குறைவு காரணமாக தினமும் 2 லட்சம் பேர் கூட குடி நீர் கிடைப்பதில்லை. சிறுவாணி குடிநீர் திட் டத்தில் பில்லூர் இரண்டாவது குடிநீர் திட் டத்தை இணைத்து சிறுவாணி குடிநீர் விநியோகம் என்ற பெயரில் குடிநீர் விநி யோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 கோடி லிட்டர் பில்லூர் குடிநீர் சிறு நீர் தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வரும் சில நாட்களில் சிறுவாணி அணை குடிநீர் அளவு மேலும் குறையும். எனவே, பில்லூர் திட்டத்தில் இருந்து கூடுதல் வழங்க திட்டமிட்டுப்பட்டுள்ளது. இந்நிலையில், வியாழனன்று சிறுவாணி அணைப்பகுதியில் 5 மில்லி மீட்டர் மழை பதி வாகியுள்ளது. லேசான தூரலாக இருந்த போதிலும் நீர்மட்டம் இதுவரை உயர வில்லை. இந்நிலையில், படிப்படியாக அதிகமாக கனமழை பெய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது. சிறுவாணி அணைப்பகுதி யில் மழை வந்தால் மட்டுமே தண்ணீர் பற் றாக்குறை போக்க முடியும் என குடிநீர் வடி கால் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.