districts

img

வேலையிழப்பை ஏற்படுத்தும் ஒன்றிய அரசு விசைத்தறி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அவிநாசி, செப்.6– ஒன்றிய அரசின் தவறான பொருளா தாரக் கொள்கை காரணமாக பஞ்சு, நூல்  விலை உயர்ந்து, விசைத்தறி தொழிலில்  வேலையிழப்பு, வருமான இழப்பை ஏற் படுத்தியதை கண்டித்து திருப்பூர்  மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி அருகே கருணைபா ளையத்தில் திங்களன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறிப்பாக ஒன்றிய அரசின் தவறான கொள்கை காரணமாக விசைத்தறி தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது. பஞ்சு,  நூல் விலை கடுமையாக உயர்ந்திருப் பதால் தொழில் நெருக்கடி, தொழிலா ளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள் ளது.

 எனவே ஒன்றிய அரசும், மாநில அரசு  உடனடியாக தலையிட்டு பஞ்சு, நூல்  விலை உயர்வை கட்டுப்படுத்த வேண் டும். ஒன்றிய அரசு கொண்டு வந்திருக் கும் மின்சார திருத்தச் சட்டத்தால் விசைத்தறி தொழிலுக்கு இலவச மின் சாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.  கைத்தறி மற்றும் விவசாயத்திற்கும் இல வச மின்சாரம் ரத்தாகும் நிலை ஏற்பட் டுள்ளது. எனவே ஒன்றிய அரசு இந்த சட்டத்தின் முன் வடிவை திரும்பப் பெற  வேண்டும். அத்துடன் தமிழக அரசு அறி வித்துள்ள உத்தேச மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும். விசைத்தறி மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டி கைக்கு 20 நாட்களுக்கு முன்பாக போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப் பப்பட்டன. இதில் தமிழ்நாடு விசைத்தறி தொழி லாளர் சம்மேளன மாநிலத் தலைவர் பி. முத்துசாமி, மாநிலப் பொதுச் செயலா ளர் எம்.சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் பி.சாமியப்பன், வி. மோகன சுந்தரம், கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ராஜன், விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட் டத் துணைச் செயலாளர் ஆர். பழனிச் சாமி, ஒன்றிய நிர்வாகி முத்துராயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;