districts

img

கிளாஸ்கோவில் ஒரு நினைவுச்சின்னம்!

காலநிலை மாற்றம் தொடர்பான ஐநாவின் உச்சிமாநாடு ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோ நகரில் 2021 அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை நடந்தது. இதன் நினைவாக அந்நகரில் ஓடும் கிளைட் (Clyde) நதிக்கரையில் ஒரு சிறுமியின் சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. ஸ்டுயர்ட் பாட்விக் (Steuart Padwick) என்ற புகழ்பெற்ற சிற்பி இதனை வடிவமைத்துள்ளார்.

நம்பிக்கையின் சின்னம்

 காலநிலையின் தீவிரத்தைக் குறைக்கும் மனித மனப்பான்மை யின் நேர்மறைச் செயல்களின் அடை யாளமாக இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ளது. கிளாஸ்கோ நகரில் கடைசியாக இயங்கிய க்யூனிங்கர் லூப் (Cuningar Loop) என்ற நிலக்கரி சுரங்கம் மூடப்பட்டு, பூங்கா அமைக் கப்பட்ட இடத்தில் இந்த சிலை நிறுவப் பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் தொழிற்பேட்டையாக இருந்த இந்த இடம் பிறகு மரங்கள் அடர்ந்த பூங்கா வாக (woodland park) மாற்றப் பட்டது.

பூங்காவின் மடித்தட்டில்'

இங்கு முன்பு செயல்பட்டு வந்த சுரங்கப்பகுதியில் இருந்து கார்பன் உமிழ்வில்லாத புவி வெப்ப ஆற்றல் உற்பத்தி குறித்து ஆராயும் பிரிட்டிஷ் புவியியல் கழகத்தின் (British Geological Survey) சோதனை மையம் அமைந்துள்ளது. ஒரு நூற்றாண்டிற் கும் மேல் செயல்பட்டுவந்த இந்த நிலக்கரி சுரங்கம் 1931 இல் மூடப்படும் வரை ஸ்காட்லாந்தின் முக்கிய தொழிற் பேட்டையாகத் திகழ்ந்தது. இது கிளாஸ்கோ நகரை அன்றைய பிரிட்டிஷ் பேரரசின் தொழில் மைய மாக அடையாளப்படுத்தி இருந்தது.

கைகள் நீட்டி எதைத் தேடுகிறாள் இவள்?

கைகளை நீட்டியபடி 23 மீட்டர் உயரத்துடன் அமைந்துள்ள இந்த சிலைக்கு “நம்பிக்கை” (Hope) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை வடிவமைத்துள்ள ஸ்டுயர்ட் பாட்விக் சூழலிற்கு நட்புள்ள விதத்தில் சிலை களை அமைப்பதில் புகழ்பெற்றவர். இலண்டன் தேம்ஸ் நதியில் ஆக்ஸோ கோபுரத்திற்கு (Oxo tower) அருகில் தலை நிமிர்ந்து நிற்கும் சிலை குறைவான கார்பனை வெளியிடும் பொருட்கள், சிமெண்ட் அற்ற முறை யில் உருவாக்கப்பட்ட கான்கிரீட் போன்றவற்றால் இவரால் உரு வாக்கப்பட்டது. உலகளவில் 2.8 பில்லி யன் டன் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேற சிமெண்ட்டில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கான்கிரீட்டே காரணமாக உள்ளது.

நன்னம்பிக்கை தரும் நம்பிக்கை

இந்த சிற்பம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. 4.5 மீட்டர் உயரம் உடைய மரத்தாலான பகுதி கிளாஸ்கோ மத்திய நிலையத்தில் இருக்கும் ஸ்காட்டிஷ் புரூஸ் மரத்தால் ஆக்கப் பட்டது. மற்றொரு பகுதி 3.5 மீட்டர் உய ரம் உடையது. இது ஸ்ட்ராத் கிளைடு (Strathclyde) பல்கலைக்கழகத் தோட்டத்தில் உள்ள மறுசுழற்சி செய் யப்பட்ட எஃகில் இருந்து வெட்டப் பட்டு உருவாக்கப்பட்டது.

சிலை சொல்லும் சேதி என்ன?

நகரில் மாநாடு நடந்தபோது கால நிலை தீவிரத்தினால் வருங்காலத்தில் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து கிளாஸ்கோவிற்கு வந்த குழந்தைகளி டம் இருந்த பதட்டத்தை கண்டு தான் பீதியடைந்ததாக பாட்விக் கூறுகிறார். அதனால் இந்த சிற்பத்தின் மூலம் மனிதகுலம் நல்லதொரு எதிர் காலத்தைக் கொண்டுள்ளது என் பதை உணர்த்தவே சிறுமியின் சிலை யை இவ்வாறு வடிவமைத்ததாக அவர் கூறுகிறார்.

கிளாஸ்கோவிற்கு அப்பால் நீளும் கைகள்

சிறுமியின் இரண்டு கைகளும் கிளாஸ்கோவிற்கும் அப்பால் உலகை நோக்கி நீள்கின்றன. இது சொல்லும் செய்தி மிக எளிமையானது. “நீங்கள் ஒவ்வொருவரும் ஏன் உங்கள் எதிர்காலத்தை நஞ்சாக்குகிறீர்கள்?” என்பதே அந்தச் செய்தி. இந்த சிற்பம் கிளாஸ்கோவின் தூய வானத்தை ஒரு காலத்தில் புகை படியச் செய்திருந்த தொழிற்சாலை புகைப்போக்கியின் வடிவத்தில் உள்ள பீடத்தின் மேல் நிற்பது போல அமைந்துள்ளது. இந்த சிற்பம் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப் பட்டு அதில்இருந்து தயாரிக்கப்படும் சிமெண்ட் இல்லாத கான்கிரீட்டால் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. 8 டிசம்பர் 2021 அன்று இந்த சிற்பம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இந்தச் சிலையமைக்கும் இத்திட்டத் திற்கு ராம்பால் (Ramboll) என்னும் புகழ்பெற்ற சூழல் நட்புடைய பொறி யியல் கட்டுமான நிறுவனம் உட்பட சுமார் 50 நிறுவனங்கள் கட்டுமானப் பொருட்கள், நிபுணத்துவத்தை வழங்கி உதவியுள்ளன. மனநல அறக்கட்டளையின் (Mental Health Foundation) ஒத்து ழைப்புடன் இந்த சிற்பத்தில் பொறிக் கப்பட்டுள்ள வாசகங்களை புகழ் பெற்ற ஸ்காட்லாந்து கலைப் பிரப லங்கள் கவிஞர் ஜாக்கி கே (Jacki Kay), எழுத்தாளர்கள் ஆண்ட்ரூ ஓஹா ஹன் (Andrew Ohagan), அலி ஸ்மித் (Ali Smith) மற்றும் 2020 புக்கர் விருது பெற்ற டக்லஸ் ஸ்டூயர்ட் (Douglas Stuart) ஆகியோர் அளித்துள்ளனர். உள்ளூர் குழந்தை களின் எழுத்துகளும் இதில் இடம் பெற்றுள்ளன. வழிகாட்டும் பலகைகள் மற்றும் பெஞ்சுகள் செய்யப் பயன்படும் சூழல் நட்புடையவிதத்தில் தயாரிக்கப்பட்ட கற்கள் பதிக்கப்பட்டு அதில் இந்த வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மாநாடு முடிவடைந்தாலும் கால நிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைக்க கிளாஸ்கோ ஆற்றிய பங்கை இந்த சிறுமியின் சிற்பம் என்றும் உலகிற்கு உணர்த்தும்.


 

;