ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் தமிழக அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநிலத் துணைத் தலைவர் ஜி இளங்கோ கிளை தலைவர் கே.சண்முகம், கிளை செயலாளர் எஸ்.செந்தில்வேலன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.