districts

img

சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க உத்தரவு

நாமக்கல், ஜூன் 9- எலச்சிபாளையம் அருகே உள்ள கொத்தம்பாளையத்தில் 100க்கும் மேற் பட்ட 26 பகுதிகளுக்கு செல்லும் காவிரி  குடிநீர் குழாய் சீரமைக்க வேண்டும்  என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள் ளார். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளை யம் அருகே பாயும் திருமணி முத்தாற் றில் குறுக்கே சுமார் 500 மீட்டர் தொலை வில், காவிரி குடிநீர் விநியோகம் செய் யும் இரும்பு குழாய் செல்கிறது. இந்த  குழாய்கள் மழைநீரில் அடித்து செல் லப்பட்டதால், புதிய இணைப்புகள் பாலத்தின் மீது அமைக்க வேண்டும் என  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் சனியன்று, ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக போராட்டக்காரர்களிடம் உறுதியளித்தனர். இந்நிலையில், ஞாயி றன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச. உமா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து  ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்ப குதி பொதுமக்களிடமும் விவரங்களை கேட்டறிந்தார். இதனையடுத்து உடனடி யாக பாலத்தின் மீது இரும்பு குழாய் கள் அமைத்து, சம்பந்தப்பட்ட ஊர்க ளுக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்திற்கும், எலச்சி பாளையம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத் திற்கும் உத்தரவிட்டார். இதன்பின் குடிநீர் வடிகால் வாரிய  பணியாளர்கள் குடிநீர் குழாய் அமைக் கும் பணிகளை மேற்கொண்டு வரு கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் போராட்டத்தால், கோரிக்கை வெற்றி அடைந்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.