திருப்பூர், ஜூலை 8- திருப்பூர் மக்களின் பேருந்து தேவை கேற்ப கூடுதலான பேருந்துகளை இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் கடந்த 4 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து பொதுமேலாளரை சந்தித்து மனு அளித்தனர். இதன் விளைவாக சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் கூடு தலான பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கேயம் சாலை டிப்போ அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த 4 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. பின்னர், தமிழ்நாடு அரசுப்போக்குவ ரத்து கழக திருப்பூர் மண்டல பொது மேலாளரை சந்தித்து கூடுதலான பேருந்து கள் இயக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு அளிக் கப்பட்டது. பொதுமேலாளர் உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இப் போராட்டத்தின் விளைவாக தற்போது தென்மாவட்டங்களுக்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் கூடுதலான பேருந்துகள் இயக்கப் படும் என்றும்,
மேலும் சேலம் பகுதிக்கும் கூடு தல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித் துள்ளார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகர செயலாளர் த. ஜெயபால் நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல், கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை உடனே இயக்க வேண்டும். திருப்பூர் முதல் பாலக்காடு வரை காலையில் செல்லும் பேருந்து மீண்டும் இயக்க வேண்டும். புறநகர பேருந்துகளில் சில வழித்தடங்களில் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, அதை குறைக்க வேண்டும். கோவில்வழி பேருந்து நிலையத்துலிருந்து தென்மா வட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துக ளில், பேருந்துக்கு பேருந்து வித்தியாசமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதர போக்குவரத்து மண்டலங்களுக்கும் இந்த கோரிக்கையை தெரிவித்து ஒரேமாதிரியான கட்டணம் வசூலிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், பணிக்கு செல்வோரை கருத்தில் கொண்டு திங்களன்று காலை நேரத்தில் கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, உடு மலை, ஈரோடு வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும். பேருந்து அதிகப்படுத்துதல், தேவையான ஓட்டுநர், நட த்துநர் குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.