districts

துணுக்குகள்

பல நாடுகளிலும் வரலாற்று நாயகர்கள் பலரது சிலைகள் குதிரையில் அமர்ந்திருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளன. அப்படி குதிரையில் அமரவைத்த வீரர்களின் சிலைகளுக்கு ஒரு பொருள் இருக்கிறது. குதிரை தனது முன்னங்கால்கள் இரண்டையும் உயர்த்தியிருப்பது போல் சிலை இருந்தால் அதிலே அமர்ந்திருப்பவர் போர்க்களத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது மரணம் அடைந்தார் என்று பொருள். குதிரை ஒரு காலை மட்டும் உயர்த்தியிருக்குமானால் அந்த வீரர் போர்க்களத்தில் காயமடைந்து பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று பொருள். குதிரைச் சிலையின் நான்கு கால்களுமே தரையில் ஊன்றியிருக்குமானால் அந்த வீரர் இயல்பான மரணத்தைத் தழுவியவர். 

;