districts

img

அடையாளம் காணப்பட்ட பட்டா இடம் ஆக்கிரமிப்பு: வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

உடுமலை, டிச.29- ஏழை மக்களுக்கு அரசு வழங்கிய இலவச பட்டா இடத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது காவல்துறை மற்றும்  வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரி  மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் பொதுமக்கள் வெள்ளிக் கிழமை மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மடத்துக்குளம் தாலுகா, கொமர லிங்கம் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு 110க்கும் மேற்பட்டவர்களுக்கு  வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டு  மனை பட்ட வழங்கப்பட்டது. பட்டாவிற் கான நிலத்தை முறையாக அளவீடு  செய்து வழங்கக்கோரி பலகட்ட போராட் டங்கள் நடத்தியதன் விளைவாக, டிச.26  ஆம் தேதி நிலத்தை சமன் செய்து மக்க ளுக்கு வழங்கிய பட்டாவின் படி இடம் அடையாளம் காணப்பட்டது. இந்நிலை யில், டிச.27 ஆம் தேதி இரவு நேரத்தில் பட்டா இடத்தில் அளவுகளை பிடுங்கி  எடுத்து நிலத்தைப் பழைய நிலைக்கு  சிலர் மாற்றி உள்ளனர். அரசு வழங்கிய இந்த நிலத்தில் இது போன்ற சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது  உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மீண்டும் அளவீடு செய்து உடனடியாக அந்த இடத்தில் அரசு சார்பில் வீடுகள்  கட்டிதர நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகாச் செயலாளர் ஆர்.வி. வடிவேல்  தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் வெள்ளியன்று இரவு வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், தாலுகாக்குழு உறுப்பினர் கள் எம்.எம். வீரப்பன், பன்னீர்செல்வம்,  ராஜரத்தினம் மற்றும் ஓய்வூதியர் சங்கத் தின் கருணாநிதி உட்பட பொது மக்கள்  பலர் பங்கேற்றனர்.