திருப்பூர், ஜூலை 5 - சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத கட வுள் பொம்மைகளை செய்யும் தொழிலாளி கள், தொடர் விலை ஏற்றதால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டு உள்ளனர். மண் பொம்மைகள் செய்யும் தொழில் கடந்த சில வருடங்களாக சரிவு ஏற்பட்டுள் ளது. பாரம்பரியமாக இந்தத் தொழிலில் ஈடு பட்டுவரும் பொம்மை செய்பவர்கள் அடுத்த தலைமுறைக்கு இந்தத் தொழிலை கற்றுத் தருகிறார்கள். பல வருடங்களாக, கலைநயம் மிக்க விநாயகர் சிலை மற்றும் இன்ன பிற கடவுள் பொம்மைகளை செய்து இந்த தொழி லில் ஈடுபட்டுள்ள குடும்பங்களின் எண் ணிக்கை தற்பொழுது குறைந்துள்ளது. சில ஆண்டுகளாக விற்பனையும் குறைந்துள் ளது. இதனால் இதை நம்பி வாழும் குடு பங்கள் இந்த தொழிலை தொடர்ந்து செய்ய முடியாத நிலையில் உள்ளனர். மேலும் தொழி லில் உள்ள பல இடர்பாடுகள் காரணமாக அடுத்த தலைமுறையை இதில் ஈடுபடுத்து வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராம் என்ற பொம்மை செய்யும் தொழி லாளி இதுகுறித்து கூறியதாவது, நான் ராஜஸ் தானி. தமிழ்நாட்டிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. இங்கு கூடாரம் அமைத்து கடவுள் பொம்மைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 சிறிய பொம்மைகள் செய்வோம். வேலைப் பாடுகள் அதிக உள்ள பெரிய பொம்மைக்கள் என்றால் நேரம் மாறுபடும். பொம்மைகள் செய்து தள்ளுவண்டிகளில் ஒரு நாளைக்கு 30 முதல் 40 கிமீ. வரை விற்பனைகாக எடுத்து செல்வோம். கடந்த சில ஆண்டுகளாக தொழில் மிகவும் பாதித்துள்ளது. முன்பெல் லாம் ரூ.700 முதல் 1000 வரை வியாபாரம் நடை பெற்றது. இப்பொது அதிகபட்சமே ரூ.300க்குத்தான் பொம்மைகள் விற்பனை ஆகிறது.
இரண்டு நபர்களுக்கு ரூ.300 எப்படி போதுமானதாக இருக்கும்? எங்கள் வாழ்வா தாரத்தை எப்படி நடத்துவது? ஒரு கிலோ தக் காளி 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பொம் மைகள் செய்ய பயன்படுத்தப்படும் சுண் ணாம்பு 1 மூட்டை ரூ.200 முதல் 300 வருகிறது. இந்த இடத்திற்கு வாடகை என்று ஏதுமில்லை. அதனால் கிடைப்பதை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எனது மகன்களும் எது வும் படிக்கவில்லை. ராஜஸ்தானில் 15 நாள் படிப்பார்கள். 15 நாள் ஏதேனும் வேலையில் ஈடுபடுவார்கள். இதனால் மகன்களையும் இங்கு அழைத்து வந்து தொழிலை கற்றுக் கொடுத்து விட்டேன். இவர்களுக்கும் வேறு தொழில் தெரியாது. எங்கள் குடியிருப்பிலும் போதுமான வசதிகள் எல்லாம் இல்லை. இதே கூடாரத்தில் பொம்மை செய்வோம். இங்கேயே சமையல் செய்து சாப்பிடுவோம். இங்கேயே தூங்குவோம். ஒரு குடம் தண்ணீர் ரூ.10 கொடுத்து வாங்குகிறோம். அது போக பொம்மை செய்யத் தேவையான சப்பை தண் ணீரும் விலை கொடுத்துத்தான் வாங்க வேண் டும். இத்தனை இன்னல்களையும் தாண்டித் தான் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோம். எனவே அதற்கான பலன் எங்களுக்கு கிடைப் பதில்லை. சுற்றுச்சூழலுக்கு நாங்கள் செய் யும் பொம்மைகளால் எந்த பாதிப்பும் இல்லை. இருந்தும் எங்களுக்கு விற்பனை இல்லை. எங்கள் காலம் முடிந்து விட்டது அடுத்த தலைமுறை என்ன செய்யப்போகி றது என்று தெரியவில்லை என்று வேதனை யுடன் தெரிவித்தார்.