districts

img

வரி விதிப்பில் மக்களை அலைக்கழிப்பதா? பூண்டி நகராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை

அவிநாசி, மார்ச் 16 - திருமுருகன் பூண்டி நகராட்சி வரிவி திப்பாளர் மக்களை அலைக்கழிப்பது குறித்து கேள்வி எழுப்பியபோது அலட் சியமாக நடந்து கொண்டார். இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியினர் வியாழனன்று நகராட்சி அலுவ லகத்தில் முற்றுகையிட்டனர். திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27  வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் புதிய வரி பெறுவதற்கு நகராட்சி நிர்வா கம் சார்பில் விண்ணப்பங்களை பெற  பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த  பெட்டியில் பொதுமக்கள் விண்ணப்பங் களை போட்டுவிட்டு செல்லுகின்றனர். இந்த விண்ணப்பம் போட்டதற்கு உண் டான, ரசீது எதுவும் வழங்குவதில்லை. இதில் வரிசை அடிப்படையில் விண் ணப்பங்களை எடுக்காத காரணமாக முறைகேடு நடைபெற்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தக வல் கிடைத்துள்ளது. இதனை சீரமைத்து தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் நகர்மன்ற கூட்டத்தில் பேசியுள்ளனர். இருப்பினும் இதே நிலை தொடர்கிறது.  இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி திருமுருகன்பூண்டி நக ராட்சி கிளைகள் சார்பில் பாதிக்கப் பட்ட பொதுமக்களும், நகராட்சி அலுவ லகம் சென்று வரிவிதிப்பாளர் சக்திவே லிடம் முறைப்படுத்த வேண்டும் என்று கேட்டதற்கு சக்திவேல் அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளார். பொறுப்பற்ற  முறையில் ஊழியர் நடந்து கொண்டதை யடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விண் ணப்பம் கொடுப்பவர்களுக்கு, ரசீது வழங்க வேண்டும், பொதுமக்களை அலைக்கழிக்காமல் வரி ரசீது உடனே  கொடுக்க வேண்டும் என்று வலியுறுத் தினர். இதனை அறிந்த காவல்துறையி னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு எதிர்வரும் காலங்களில் இது போன்ற சிக்கல்கள் நடைபெறாமல் இருக்கும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலந்து சென்றனர். இதில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடா சலம், ஒன்றியக்குழு உறுப்பினர் பால சுப்பிரமணியம், திருமுருகன்பூண்டி நக ரமன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தேவராஜன், பார்வதி சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.