districts

img

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சேலம், மே 18- கடம்பூர் பட்டாசு விபத் தில் உயிரிழந்தவர் குடும்பத் திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவ ருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், கடம் பூர் மேற்கு காடு பகுதியைச் சேர்ந்த தனசேகரன் என்பவருக்கு சொந்த மான பட்டாசு குடோனில், கூலமேடு கிராமத் தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அந்த குடோ னில் ஏற்பட்ட வெடி விபத்தில், ராஜமாணிக் கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சத்யா மற்றும் விஜயா ஆகிய இரண்டு பெண்கள் படுகாயங்களுடன் ஆத் தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கெங்க வல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம் பவத்தை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்கள் மறைந்த ராஜ மாணிக்கம் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். சேலம் மாவட்ட நிர்வாகம் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தற் போது ரூ.3 லட்சம் நிவாரணமாக அறிவித்துள் ளது. அதனை மாற்றி ரூ.10 லட்சம், குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண் டும். மேலும், பாதிக்கப்பட்ட இரண்டு பெண்க ளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என சிபிஎம் சேலம் மாவட்டக்குழு வலியுறுத்தி யுள்ளது. இதைத்தொடர்ந்து வெடி விபத்தில் ஆய்வு மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி தலை வர்கள், இனிமேல் இவ்வாறு நடைபெறாத வண்ணம் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இந்நிகழ்வுகளில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை.சண் முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, மூத்த தலைவர் ரங்கசாமி, கெங்கவல்லி தாலுகாச் செயலாளர் தமிழ் மணி, இடைக்கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பெருமாள், மணி, வெங்கடாச்சலம், எம். ஆர்.ராதா, கடம்பூர் கிளைச் செயலாளர் திரு ஞானம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;