திருப்பூர், அக். 6- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட வேலம்பாளையம் ஊராட்சி மற்றும் பச்சாபாளை யம் ஊராட்சி பகுதிகளில் வியாழனன்று மாவட்ட வருவாய் அலுவலர் த.ப. ஜெய்பீம் தலைமையில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 29 புதிய வளர்ச்சி திட்டப்பணி களை ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் துவக்கி வைத்தார். இதன்பின் தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்த்துறையின் சார் பில் 152 பயனாளிகளுக்கு ரூ.11.12 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.