districts

img

மூலப்பொருட்களின் விலையேற்றத்தினை கட்டுப்படுத்திடுக கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

கோவை, டிச.10 – சிறு, குறு தொழில் மூலப் பொருட்களின் விலை யேற்றத்தை மத்திய அரசு கட்டுப்படுத்திட வேண்டு மென கோவை தொழில் அமைப்புகளின் கூட்ட மைப்பு வலியுறுத்தி உள்ளது.  இதுதொடர்பாக கோவையின் 19 சிறு,குறு தொழில் அமைப்புகளை உள்ளடக் கிய கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் (போசியா) ஒருங்கிணைப் பாளர்கள் ஜேம்ஸ், சிவசண்முக குமார், சுருளிவேல் ஆகியோர் புதனன்று செய்தி யாளர்களிடம் கூறுகையில், கோவையின் சிறு, குறு தொழில்கள் பணமதிப்பிழக்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆகிய மத்திய அரசின் செயல்பாடுகளால் கடுமையாக பாதிக்கப் பட்டன. தற்போது கொரோனா பேரிடரின் காரணமாக மேலும் நெருக்கடிக்கு உள் ளாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இத் தொழில்களின் மூலப் பொருட்களான ஸ்டீல், காப்பர், அலுமினியம், துத்தநாகம், பிளாஸ்டிக் போன்றவை கடுமையாக விலையேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக 2020 ஆகஸ்ட் மாதத்தினை அடுத்து மட்டும் ஸ்டீல் மற்றும் காப்பர் 25 சதமும், அலுமினியம் 17 சதமும், துத்தநாகம் 16 சதமும் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் 20 லிருந்து 140 சதம் வரை விலையேற்றம் அடைந்துள்ளன.  கொரோனா பேரிடரிலிருந்து ஓரளவு மீண்டு வரும் சமயத்தில் மத்திய அரசு எடுத்த இந்நடவடிக்கை எங்களுக்கு பெரும் ஏமாற்றமாகும். இந்த விலையேற்றத்தின் காரணமாக மத்திய அரசு அறிவித்த கடன்  மொத்தமும் நிறுவனங்கள் கூடுதல் சுமையை சுமக்கவே செலவழிக்க வேண் டியதாயிற்று. ஆகவே மத்திய அரசு தொழிற் துறையின் அத்தியாவசிய அடிப்படை இடுபொருட்களின் விலையைக் கட்டுப்ப டுத்துவதற்கு ஒரு கண்காணிப்புக் கமிட் டியை அமைக்க வேண்டும். இக்கமிட்டியில் சிறு, குறு தொழில்களுக்கு உரிய பிரதிநி தித்துவம் கொடுக்க வேண்டும்.  இதேபோல், மத்திய அரசு உற்பத்தித் தொழில் மூலப் பொருட்களுக்கும் அதிக பட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சிறு, குறு உற்பத்தித் தொழில் நிறுவனங்க ளுக்காக அரசாங்கமே மூலப் பொருட்களை இறக்குமதி செய்து மாநில அரசின் வாணிபக் கழகம் மூலம் முறையாக வழங் கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டீல் போன்ற மூலப்பொருட்கள் எளிதில் கிடைக்கக்கூடிய எஸ்ஏஐஎல் கிடங்கை உடனடியாகத் திறக்க உத்தரவிட வேண் டும்.மேலும், மத்திய அரசு சலுகை விலை யில் மூலப்பொருட்களை அளிக்க முன்வர வேண்டும். மூலப்பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரிகளிடம் சரக்கு கையிருப் பிற்கு அதிகபட்ச அளவை நிர்ணயிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியு றுத்தி வரும் டிச.15 ஆம் தேதி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய் துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

;