திருப்பூர், செப். 14 - கோடாங்கிபாளையம் எஸ்.ஜி.புளு மெட்டல்ஸ் நிறுவனம் விதி மீறிலில் ஈடு பட்டு முறைகேடாக செயல்படுவதாக கூறி, விவசாயி செந்தில்குமார் என்பவர் காலவ ரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டி ருக்கிறார். ஒன்பதாவது நாளாக புதன்கிழமை அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் வள்ளல் புகார் கூறப்படும் எஸ்.ஜி.புளூமெட்டல்ஸ் நிறுவ னத்தில் புதன்கிழமை கள ஆய்வு மேற் கொண்டார்.