கோவை மாவட்டம், சூலுார் பெரிய குளத்தில், பேரூ ராட்சி சார்பில் படகுத் துறை மற்றும் பூங்கா பராமரிக்கப்பட்டது. விடு முறை நாட்களில் இயற்கை காட்சிகள், பறவை களை ரசிக்க, சூலுார் சுற்றுவட்டார மக்கள், குடும்பத்தினருடன் படகுத்துறைக்கு வருவது வழக்கம். பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடுவதும், பொழுதை இனிமையாக கழிப்பதும் வாடிக்கை. படகு சவாரி நிறுத்தப் பட்டதால், பொதுமக்கள் வருகை குறைந்தது. படகு சவாரி வருமானம் இல்லாததால், படகுத் துறை மற்றும் பூங்காவை பராமரிக்காமல் பாழ டைந்து காணப்படுகிறது. தற்போது பூங்கா சுற்றுச் சுவர்கள் சிதிலமடைந்து உள்ளது. குழந்தைகள் விளையாடி மகிழும் ஊஞ்சல் கள் பயன்படுத்த இயலாத நிலையில் உள் ளது. இதுகுறித்து பூங்காவிற்கு வந்த பொது மக்கள் கூறுகையில், பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து உள்ளன. இத னால் குழந்தைகள் விளையாட முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். படகுத்துறையில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு, வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தனியார் கல்லுாரி மாணவர்கள், பூங்காவை சுத்தப்படுத்தி, வர் ணங்கள் தீட்டியிருந்தனர். பேரூராட்சி நிர்வா கம் முறையாக பராமரிக்காமல் விட்டதால் பூங்கா தற்போது பயன்படுத்த இயலாத நிலை யில் உள்ளது. கோவை மாவட்டத்தில் பொழுது போக் கிற்கு என்று பிரத்தியோகமான இடங்கள் இல்லை. ஒன்றிரண்டு இதுபோன்று பொழுதை கழிக்கும் இடங்களும் பராமரிப்பின்றி உள் ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு பூங்கா மற்றும் படகுத்துறையை சீர மைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந் துள்ளது.
-சூலூர் மதி