districts

img

வேகத்தடை இல்லாததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

நாமக்கல், பிப்.8- பள்ளிபாளையம் அருகே வளைவான பகுதியில் வேகத் தடை அமைக்காததால், வேகமாக வந்த நான்கு சக்கர வாக னம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ளது ஈக்காட்டூர் என்ற பகுதி. சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. புதனன்று காலை சங்ககிரியில் இருந்து பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த கார், ஈக்காட்டூர் பகுதி அருகே வந்த பொழுது, ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தை திடீ ரென வளைவில் திருப்புவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டி, வேகமாக பிரேக் போட முயன்ற பொழுது, வாகனம் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விழுந் தது. நல்வாய்ப்பாக கார் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பி நிலையில், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக கார் ஓட்டுநரை காரில் இருந்து மீட்டனர். இது குறித்து பள்ளிபாளை யம் காவல் நிலையத்தில் கேட்ட பொழுது இது குறித்த புகார் கள் ஏதும் வரவில்லை என்று தெரிவித்தனர். தொடர்ந்து அதிக அளவு விபத்து நடைபெறும் பகுதியாக இந்த சாலை உள்ள தால், இங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டும் வேகத்த டுப்பு இரும்பு டிவைடர்கள் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தொடர் கோரிக் கையாக உள்ளது.