உடுமலை, செப். 17 - உடுமலை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் மஹாலில் பத்து நாட்கள் நடைபெறும் 9 ஆவது புத்தகத் திருவிழா 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவங்கியது. உடுமலை புத்தகாலயம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் இணைத்து உடுமலையின் நம்ம ஊரு புத்தகத் திருவிழா என்ற பெயரில் இதை நடத் துகின்றனர். தினமும் மாலையில் பல்வேறு கலைநிகழ்ச்சி மற்றும் கருத்துரையாளர்கள் கலத்து கொள்ளும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்வாக வெள்ளிகிழமை மாலையில் உடுமலை மத்திய பேருந்து நிலை யத்தில் இருந்து கலைஞர்கள், மடத்துக் குளம் ஆசான் வீரமணியின் பகத்சிங் களரி குழுவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற கலைப் பேரணி தொடங்கியது. அங்கிருந்து புத்தகத் திருவிழா நடைபெறும் தேஜஸ் மஹா லுக்கு வந்தடைந்தனர். இதை தொடர்ந்து புத்தக கண்காட்சி அரங்கை உடுமலை நகர் மன்றத் தலைவர் மத்தீன் துவக்கி வைத் தார். இந்த கண்காட்சியில் என்சிபிஎச், பாரதி, காலச்சுவடு, ஆனந்தவிகடன், மகேஸ்வரி உள்ளிட்ட புத்தக நிறுவனத்தினர் 28 அரங்குக ளில் பல்வேறு வகையான புத்தகங்களை காட்சிப்படுத்தி உள்ளனர். முதல் நாளிலேயே உடுமலை நகர மக்கள் ஆர்வத்துடன் புத்தகங் களை பார்வையிட்டனர். ஏற்கெனவே இந்த புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மாணவ, மாணவி களுக்கான கலை இலக்கிய திறனாய்வுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த புத்தகத் திருவிழாவில் பரிசு வழங்கப்ப டுகிறது. இந்த விழாவில், ஒவ்வொரு நாளும் கண் காட்சிக்கு வருகை தரும் பள்ளி மாணவ, மாணவிகளில் குலுக்கல் முறையில் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூ. 500 மதிப்பில் மொத்தம் ரூ.1000 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் பொது மக்களில் இருவர் தேர்வு செய்யப் பட்டு அவர்களுக்கு தலா ரூ.200 மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்படுகிறது என்று புத்த கத் திருவிழா வரவேற்புக் குழுவினர் தெரிவித் தனர்.