districts

img

தாராபுரம் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

தாராபுரம், செப். 26 - தாராபுரத்தில் ஊட்டச்சத்துமிக்க தானியங்களின் உற்பத் தியை அதிகரிக்க, வேளாண்மை துறை சார்பில் விவசாயிக ளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. உணவு மற்றும் ஊட்டச்சத்து மிக்க பாதுகாப்பு திட்டத்தில், பயிர் சாகுபடி சார்ந்த விவசாயிகளுக்கான கார் பருவத் திற்கான முதல்கட்ட தொழில்நுட்ப பயிற்சி தாராபுரம் அடுத்த  வீராச்சிமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. தாராபுரம் உதவி  வேளாண்மை இயக்குநர் லீலாவதி, தாராபுரம் வட்டாரத்தில்  செயல்படுத்தப்படும் வேளாண்மை திட்டங்கள் மற்றும் மானிய விபரங்கள் பற்றி விரிவாக விளக்கினார். திருப்பூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் சுருளி யப்பன் ஊட்டச்சத்து மிக்க தானியங்களின் முக்கியத்துவம், தானியங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு குறைந்த நீர் தேவை உள்ள ஊட்டச்சத்து மிக்க தானியங்க ளான சோளம், கம்பு, ராகி சாகுபடியினை மேற்கொள்ள அறிவு றுத்தினார்.

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட  ஆலோசகர் அரசப்பன் தானியங்களில் உள்ள ஊட்டச்சத்து களான மாவுச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக் கள் மற்றும் நார்ச்சத்துக்கள் குறித்த விபரங்களையும், அத னால் ஏற்படும் நன்மைகளான மனித உடலில் கொழுப்புச்  சத்தினை குறைத்தல், சர்க்கரை அளவினைக் கட்டுப்படுத்து தல் மற்றும் செரிமானத்தை துரிதப்படுத்துதல் குறித்து விரி வாக விளக்கிக் கூறினார்.  கோடை உழவு செய்யும் முறை மற்றும் பயன்கள் பற்றியும்,  குறுகிய கால தானியம் மற்றும் தட்டு மகசூல் தரவல்ல கோ (எஸ்) -32 ரக சோளத்தின் சிறப்பம்சங்கள் பற்றியும், விதை  மற்றும் வேர் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த சூடோ மோனாஸ் விதை நேர்த்தி, உரச்செலவை குறைத்து இயற்கை  முறையில் உரங்கள் பெற திரவ உயிர் உரங்கள் பயன்படுத் துதல், வறட்சி காலங்களில் நீர் பற்றாக்குறையிலிருந்து பாது காக்க பூசாஹைடுரோஜெல் பயன்படுத்துதல், மகசூலினை அதிகரிக்க தானிய நுண்ணூட்டம் இடுதல் பற்றியும், இத்திட் டத்தின் கீழ் வழங்கப்படும் மானியங்கள் பற்றியும் எடுத்துக்  கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை தாராபுரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்கள் செய்திருந் தனர். இப்பயிற்சி முகாமில் துணை வேளாண்மை அலுவலர்,  உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் திரளான விவசாயிகள்  கலந்து கொண்டனர்.

;