districts

img

மழையால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி

உதகை, மே 16- கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு மணி  நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் தேயிலை தோட்ட  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் கடந்த சில நாட்களாக  வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், தேயிலை துளிர்க்காதால் விளைச்சல் வெகுவாக பாதிக்கப் பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக காலை நேரத்தில் வெயிலும், பிற்பகல் நேரத்தில் மிதமான மழை யும் பெய்து வந்தது.  இதனால், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. புதனன்று மதியம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. மழை காரணமாக கோத்தகிரியில் குளிர்ச்சியான கால சூழ்நிலை நிலவியது. தொடர் மழை பெய்து வரு வதால் தேயிலை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ் சியடைந்துள்ளனர்.