districts

img

போதை ஏற்ற விற்ற காசு - தெளிவாக சுருட்டல் ரூ.7 கோடி மதிப்பிலான மதுவகைகள் மாயம்

டாஸ்மாக் வருவாய் குறைந்தது குறித்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் ரூ.7 கோடி மதிப்பிலான மதுவகைகள் காணாமல் போனது குறித்து அதிர்ச்சியடைந்துள்ளனர். கோவை மண்டலத்தில் டாஸ் மாக் மதுபான வகைகள் விற் பனை என்பது சென்னை, மதுரை போன்ற மாவட்டங்களை போல விற்பனையில் ஈடுகொடுக்கும், சில நேரங்களில் அந்த மாவட் டங்களை காட்டிலும், அதிகம் விற் பனையாகும். குறிப்பாக தீபாவளி போன்ற விடுமுறை விழா காலங் களில் வருவாயை அள்ளி எடுக் கும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் விற் பனை என்பது முன்னைக்காட்டி லும் குறைந்து வருவதை வசூலை பார்க்கும் அதிகாரிகளுக்கு உணர்த்தியது. தொடர்ந்து நெகட் டிவ் குரோத் வருகிற நிலையில், இதுகுறித்து செவ்வாயன்று டாஸ் மாக் அதிகாரிகள் உள்ளடங்கிய  பெரிய படை கோவையில் இறங்கி  ஆய்வு மேற்கொண்டபோது  பிள்ளையார் பிடிக்க குரங்காய் போனது என்கிற பழமொழியை  போல ஆவணங்களை ஆய்வு  செய்த அதிகாரிகள் குழு  டாஸ்மாக் குடோன்களில் சரக்கு வகைகள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

சுமார் ரூ.7 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் இருப்பு குறித்து ஆவ ணத்தில் உள்ளது. ஆனால் குடோ னில் இல்லை என்பதே இந்த அதிர்ச்சிக்கு காரணமாய் இருந் துள்ளது. இதுகுறித்து அதிகாரி கள் டாஸ்மாக் மாவட்ட அதிகாரிக ளிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.  இதுகுறித்து டாஸ்மாக் ஊழி யர் ஒருவர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் சமீப காலமாக டாஸ் மாக் வருவாய் பெருமளவு குறைந் துள்ளது.

குறைந்தபட்சம் 10 சதவி கிதத்தில் அதிகபட்சம் 54 சதவிகி தம் வரை வருவாய் குறைந்துள் ளது. இதுகுறித்து ஆய்வு செய் யவே சென்னையில் இருந்து கலால்  மேலான்மை இயக்குநர் தலைமையில் பொதுமேலாளர் ஜோதிசங்கர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பத்துக் கும் மேற்பட்ட மாவட்ட மேலாளர் கள், 20 இளநிலை உதவியாளர் கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடு பட்டு வருகின்றனர். இதில், டாஸ் மாக் மதுவகைகள் குறித்த ஆய் வில் சுமார் 10 கோடி ரூபாய் அள விற்கான மதுவகைகள் மாயமாகி யுள்ளது. இது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கொரோனா காலத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருந்த போது, சட்டவிரோதமாக மது வகைகளை எடுத்து விற்பனை யில் ஈடுபட்டதும், தற்போது மது பானகூடங்களில் சட்டவிரோத மாக விற்பதற்கு கொண்டு சென் றது போன்றவைகள்தான் இந்த மதுவகைகள் இல்லாததற்கு கார ணமாக இருக்கும். மேலும், டாஸ்மாக் கடைக ளுக்கு வரும் மதுவகைகளில் ஆர் டர் போட்டது ஒன்றாக இருக்கும், வந்தது ஒன்றாக இருக்கும், குவாலிட்டி, குவாண்ட்டி அனைத் திலும் வித்தியாசம் இருக்கும்.

இத னையெல்லாம் சரிபார்த்து அனுப்ப வேண்டிய இஎஸ்ஓ கையெழுத்து போடும் வேலையை மட்டுமே பார்ப்பார். குடோனில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு செல் லும் மதுவகைகளை பர்மிட்டோடு தான் கொண்டு செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால் அப்படி  எந்த நடைமுறையும் இங்கு  இல்லை. இப்படி தொடர்ந்து விதி களை ஆளும்கட்சிக்காக வளைந்து கொடுக்கும் அதிகாரி கள் இறுதியில் ஊழியர்களை பலி காடாக்குவார்கள். அதுதான் தொடர்ந்து நடைபெறுகிறது. ஒரு சில ஊழியர்களும் பாட்டிலுக்கு ஐந்து, பத்து கிடைக்கிறது என்ப தற்காக அதிகாரிகள், ஆளும் கட்சியினரின் சட்டவிரோத நடவ டிக்கைகளுக்கு துணை போகி றார்கள் என்பதுதான் துயரம் என் றார். டாஸ்மாக் நிர்வாகத்தில் பல முறைகேடுகள் நடைபெறுகிறது என்பதை சமீபத்தில் நமது தமி ழக நிதியமைச்சர் கூட டாஸ்மாக் நிர்வாகத்தின் அனைத்து அம்சங் களையும் முறைப்படுத்த வேண் டும் என்கிற வார்த்தையை பயன் படுத்தினார். மதுவிலக்கு ஆயத் தீர்வு துறை (டாஸ்மாக்) அமைச் சர் பொறுப்பு வகிக்கும் கோவை  மாவட்டத்தில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் டாஸ்மாக் ஊழியர் களிடையே சலசலப்பை ஏற்படுத் தியுள்ளது.  எது எப்படியோ அரசின் வரு வாய் களவாடப்படுகிறது. சிலரின் கல்லாவை நிரம்பிக்கொண்டு இருக்கிறது. போதை ஏற்ற விற்ற காசை தெளிவாக சுருட்டியவர் கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும். இதனை முறைப்ப டுத்த வேண்டும் என்பதே அனை வரது எதிர்பார்ப்பாக இருக்கி றது.

-அ.ர.பாபு