districts

img

அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் டாஸ்மாக் ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

உதகை, செப்.22- அரசு ஊழியர்களுக்கு இணை யான ஊதியம் வழங்க வேண்டும் என  சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் கள் சங்க (சிஐடி)யு 9 ஆவது ஆண்டுப் பேரவை தோழர் வி.ராஜேந்திரன் நினை வரங்கில் வியாழனன்று மாவட்ட தலைவர் ஜே.ஆல்தொரை தலைமை யில் நடைபெற்றது. சங்கத்தின் கொடியை துணைத்தலைவர் எம்.ராஜன் ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை துணைச்செயலாளர் எச்.எம்.தியாகராஜன் வாசித்தார். துணைச்செயலாளர் ஆர்.பால சுப்பிரமணியம் வரவேற்புரை யாற்றினார். பேரவையை துவக்கி வைத்து சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.ரமேஷ் உரையாற்றினார். அறிக் கைகளை செயலாளர் பி.ரமேஷ், பி. சிவக்குமார் ஆகியோர் முன்வைத் தனர். சிஐடியு சுமைப்பணி தொழி லாளர் சங்க மாவட்ட நிர்வாகி கே. ராஜன் வாழ்த்துரையாற்றினார். இப்பேரவையில், டாஸ்மாக் கடை களில் 19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களின் பணி வரன்  முறைபடுத்த வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் பெறும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இஎஸ்ஐ திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசு ஊழியர் களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மலை மாவட்டமான நீலகிரியில் வனவிலங்கு தாக்குதல் அதிகரித்துள்ளதால், இரவு பணி நேரத்தை 10 மணிக்கு பதிலாக கடையை 8 மணிக்கு மூட அனுமதிக்க வேண்டும். ஹெத்தையம்மன் திரு விழாவின் போது அரசு மதுபானக்கடை களுக்கும் விடுமுறை அளிக்க மாவட்ட  நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவராக ஜே. ஆல்தொரை, செயலாளராக பி. மகேஷ், பொருளாளராக எச்.எம்.தியாக ராஜன் உட்பட 20 பேர் கொண்ட மாவட்ட  கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. பேரவையை நிறைவு செய்து டாஸ் மாக் ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் உரையாற்றினார். சம்மேளனக்குழு உறுப்பினர் ஏ.நவீன் சந்திரன் நன்றி கூறினார்.

;