districts

img

தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

தாராபுரம்,  அக். 15 - தாராபுரத்தில், எம்எஸ்டிஇ பரிந்து ரைப்படி பதவி உயர்வு உட்பட  பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவ லர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தாராபுரம் அரசினர்  தொழிற்பயிற்சி நிலையம் முன்பு சங்கத் தின் துணைத்தலைவர் அருள்பிரகாசம்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கோரிக்கைகளை விளக்கி சங்கத் தின் மாநில தலைவரும், அரசு ஊழியர்  சங்கத்தின் மாநில துணை தலைவரு மான மு.சீனிவாசன் பேசினார். ஆர்ப் பாட்டத்தின் போது சான்றிதழ்தாரர்க ளுக்கு எம்எஸ்டிஇ பரிந்துரைப்படி பதவி உயர்வு வழங்கவேண்டும், பயிற் சியாளர்களுக்கு சிபிடி தேர்வை ரத்து  செய்யவேண்டும், கணிதம் மற்றும் வரைபடம் பாடப்பிரிவுகளில் பயிற்சி  நேரம் குறைத்ததை ரத்து செய்திட தமி ழக அரசு வலியுறுத்த வேண்டும், தொகுப்பூதியத்தில் பணிபு ரியும் பயிற்றுநர்கள் மற்றும்  உதவியாளர்களை பணி நிரந் தரம் செய்ய வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் குறித்து கோசங்கள் எழுப் பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் தாராபுரம் கிளை  செயலாளர்கே.செந்தில்கு மார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  நிர்வாகிகள் இல.தில்லையப்பன்,கே. செந்தில்குமார், வி.தங்கவேல், எஸ்.  ராணி, ஏ.ஜெயந்தி, என்.கண்ணஞ்சி  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து  கொண்டனர். முடிவில் ஆர்.ராமசாமி  நன்றி தெரிவித்தார்.