districts

img

போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு

ஈரோடு, ஜூலை 10- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித் தேர்விற்கு  தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோட் டில் தொடங்கியது. தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணை யம் நடத்தும் குரூப் 4 போட்டித் தேர்வு களுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஈரோடு மாநகரில் நடத்தி வருகிறது. இதன்  தொடக்க விழா நேதாஜி காய்கறி மார்க்கெட் பின்புறமுள்ள ஈகேஎம்.அப்துல்கனி மதரஸா இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளியில் நடை பெற்றது. அமைப்பின் மாநில உதவித்தலை வர் ப.மாரிமுத்து நிகழ்ச்சிக்கு தலைமை வகித் தார். பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஏ. ஹாத்திம்தாய் வரவேற்றார். ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி வெற்றி  பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர் களையும் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கி னார். பள்ளி நிர்வாகக்குழு தலைவர் ஏ.இக் கந்தர், ஜமா அத்துல் உலமா சபை மாவட்ட செயலாளர் கே.பைஜூர் ரஹ்மான் பாக்கவி, சிறுபான்மை மக்கள் நலக்குழு தலைவர் கே.எஸ்.இஸாரத்தலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இலவச பயிற்சி வகுப்பில் சேர ஆதார் அட்டை நகல் மற்றும் ஒரு புகைப்படும் கொண்டு வர வேண்டும். ஞாயிறுதோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  வகுப்புகள் நடைபெறும். மேலும், விபரங்க ளுக்கு 94430 19800, 90033 86691, 97886 55786 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளாலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவில், மாவட்ட பொருளாளர் கே.நடராஜன் நன்றி கூறினார்.

;