districts

img

சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உதகை, செப்.10- பணி நீக்க காலத்தை பணிக்கால மாக மாற்ற வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியா ளர்கள் சங்கத்தினர் உதகையில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்தி ஆணை வழங்க  வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்விதிறன் பெறாத ஊழி யர்களுக்குரிய ஊதியம் வழங்க வேண் டும். பணியில் இருக்கும் போது சாலை  பணியாளர்கள் உயிரிழந்தால், வாரிசுக ளுக்கு கருணை அடிப்படையில் நிய மனம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை  சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். உதகை கோட்ட  பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்  கோட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் வெள்ளிங் கிரி, இணைச்செயலாளர் ஜான் பாஸ்கோ ஆகியோர் முன்னிலை வகித் தனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் பால சுப்பிரமணியன் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினார். இதில், மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ், மாநில செயற் குழு உறுப்பினர் அய்யாசாமி, மாவட்ட இணை செயலாளர் ரங்கராஜ், கோட்ட செயலாளர் ஜெகந்தான், இணைச் செயலாளர் இடும்பன், கோட்ட பொரு ளாளர் சின்னமாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.