districts

img

தமிழ்நாடு நாள் விழா புகைப்படக்கண்காட்சி

திருப்பூர், ஜூலை 18 - திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவையொட்டி  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகைப்படக் கண் காட்சியை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் துவக்கி வைத் தார். தமிழ்நாடு அரசு, நடப்பு ஆண்டில் ஜூலை 18-ஆம் நாளை  தமிழ்நாடு நாள் விழாவாக மாநிலம் முழுவதும் உள்ள  பொதுமக்கள், மாணவர்கள் அறியும் வண்ணம் அவர்களி டம் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வண்ணம் தமிழ்நாட்டில் உள்ள 38  மாவட்ட தலைநகரங்களில் பள்ளி மாணவ - மாணவிகளை  கொண்டு பேரணி மற்றும் கண்காட்சி நடத்த அறிவுறுத்தப் பட்டது. அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடப்பு ஆண்டிற்கான ‘தமிழ் நாடு நாள் விழா” புகைப்படக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை துவங்கியது. இதனை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ் துராஜ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருப்பூர் மாநக ராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகர காவல்துறை ஆணை யர் பிரவீன்குமார் அபினவு, மாநகராட்சி ஆணையர் பவன்கு மார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சி வருகிற 23-ந் தேதி வரை காலை 10  மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது. தமிழ்நாடு நாள்  விழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ் நாடு உருவான விதம் மற்றும் தமிழ்நாட்டின் கலாசாரம், பாரம் பரியம், பண்பாடு, பெருமைகள் குறித்த சிறப்பு புகைப்பட  கண்காட்சி இடம் பெற்றுள்ளது. இத்துடன், பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளின் விழிப் புணர்வு பேரணியும் நடைபெற்றது.