districts

img

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம்: திருப்பூரில் உறுதிமொழி ஏற்பு

திருப்பூர், செப். 24 - திருப்பூரில் தூய்மை நகரங்களுக் கான மக்கள் இயக்கம் குறித்து உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி, நான்காவது மண்டலம், 38 ஆவது வார்டு, பிருந்தா வன் அவென்யூவில் சனியன்று இந்நி கழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநக ராட்சி மேயர் ந.தினேஷ்குமார், நகராட்சி  நிர்வாக இயக்குநர் பி.பொன்னையா ஆகியோர் முன்னிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செய லாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் பொது மக்கள் மற்றும் அலுவலர்கள் இதில் பங்கேற்று உறுதிமொழி ஏற்ற னர். இந்நிகழ்வில் பேசிய சிவ்தாஸ் மீனா, அனைவரும் ஒன்றிணைந்து தங் கள் மாநகரை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். குப்பைகளை முறையாக அதற்கான இடத்தில போடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  வாரத்தின் இரண் டாவது மற்றும் நான்காவது சனிக்கிழ மைகளில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தில் பொது மக்கள்,  தன்னார்வலர்கள், தொழில் நிறுவனங் கள் என அனைவரும் தங்களை ஈடுப டுத்தி கொண்டு தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

திருப்பூர் மாநகரை திறன்மிகு மாநக ராக மாற்ற அனைத்து வகையிலும் செயல்பாடுகள் தொடரும். தூய்மை பணிகள் மேற்கொண்டு குப்பை இல்லா  மாநகராக மாற்றப்படும் என மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார். சின்னாண்டிபாளையம் குளம், நுண்  உரம் செயலாக்க மையம் மற்றும் புதி தாக அமைக்கப்பட்டுவரும் கழிவுநீர் மறுசுழற்சி மையம் ஆகியவற்றை கூடு தல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா,  நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.பொன் னையா ஆகியோர் ஆய்வு மேற்கொண் டனர். மேலும், 1ஆவது மண்டல அலுவ லக வளாகத்தில், பழுது பார்க்கப்பட்ட  குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங் களை பார்வையிட்டார். அத்துடன் குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிலும் மாணவ, மாணவியர்களிடம் கலந்துரை யாடினார்.  நிறைவாக, திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி பகு திகளில் நடைபெற்று வரும் பணிகள்  குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற் றது.

;