districts

img

ஆனைமலை அரசுப்பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

கோவை, செப்.22- ஆனைமலை பகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வேளாண்மை விற்பனை வணிக வளா கம், உழவர் உற்பத்தியாளர் நிறுவன காய்கறி விற்பனை நிலையம் ஆகிய வற்றில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீ ரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம், ஆனைமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட  ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாணவ, மாண வியர்களிடம் கலந்துரையாடினார். மேலும், மதிய உணவு தயாரிக்கும் சத்து ணவுக்கூடத்தில் உணவு சுத்தமாகவும், சுகாதாரமாகவும், தரமானதாகவும் சமைக்கப்படுகிறதா? என ஆய்வு மேற் கொண்டார். இதைத்தொடர்ந்து ஆனை மலை வேளாண் விற்பனை வணிக வளா கத்தில் கொப்பரை தேங்காய் கொள் முதல் நிலையத்தில் ஆய்வு செய்து, கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்ட விவரங்களை கேட்ட றிந்ததுடன், முறையாக அவற்றை பாது காக்க  விற்பனை நிலைய அலுவல ருக்கு அறிவுத்தினார். இதன்பின், உழ வர் உற்பத்தியாளர் நிறுவன காய்கறி விற்பனை நிலையம், பழங்குடியின மகளிர் சுய உதவிக்குழுவினரால் நடத் தப்படும் தையல் கடை மற்றும் உண வகத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டது டன், உணவகம் நடத்தி வரும் மகளிர்  சுய உதவிக்குழுவினரை பாராட்டி னார்.