கோவை, செப்.15- ஆனைமலை, கிணத்துக் கடவு, மதுக்கரை, எஸ்.எஸ்.குளம் ஆகிய பகுதிகளில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் பெரியார் நினைவு சமத்து வப்புரங்களில் 319 வீடுகள் பழுதுபார்ப்பு பணிகள் நடை பெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டனர். கோவை மாவட்டத்தில் ஆனைமலை வட் டாரம், தென்சங்கம்பாளையம் ஊராட்சி, கிணத் துக்கடவு வட்டாரம், வடசித்தூர் ஊராட்சி, மதுக்கரை வட்டாரம், செட்டிபாளையம் பேரூ ராட்சி, எஸ்.எஸ்.குளம் வட்டாரம், வெள்ளை கிணறு (மாநகராட்சி பகுதி) ஆகிய இடங் களில் சமத்துவப்புரங்கள் உள்ளன. இந்நிலையில், சமத்துவபுரங்கள் மறுசீர மைப்பு செய்தல் பகுதி - 1 திட்டத்தின் கீழ் நான்கு சமத்துவபுரங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளது. தென்சங்கம்பாளையத்தில் ரூ.39 லட்சம் மதிப்பில் 78 வீடுகளும், வடசித்தூ ரில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் 90 வீடுகளும், செட்டிபாளையம் பேரூராட்சியில் ரூ.32.50 லட் சம் மதிப்பீட்டில் 65 வீடுகளும், வெள்ள கிணறு பகுதியில் ரூ.43 லட்சம் மதிப்பில் 86 வீடுகளும் என மொத்தம் 319 வீடுகள் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் பழுதுபார்ப்பு பணிகள் தலா ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ள பட்டு வருகின்றன. இதில் 72 வீடுகளின் பழுது பார்ப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் மீத முள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சமத்துவபுரங்களில் 2 குடிநீர் வழங் கல் பணிகள், 4 சாலைபணிகள், 45 தெரு விளக்கு பணிகள், ஒரு விளையாட்டு மைதா னம், 4 சமுதாய நலக்கூடங்கள், 2 நூலக கட்டிடங்கள், ஒரு அங்கன்வாடி கட்டிடம், 3 நியாயவிலைகடைகள், 3 தந்தை பெரியார் சிலைகள், 3 சமத்துவபுர நுழைவு வாயில்கள் என மொத்தம் ரூ.93.71 லட்சம் மதிப்பீட்டில் 68 உட்கட்டமைப்பு சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வியாழனன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கே. கவிதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.