districts

img

24 ஆண்டுகளுக்கு பிறகு திருமூர்த்தி அணையிலிருந்து பாலாற்றில் உபரி நீர் திறப்பு

உடுமலை, டிச.1-  திருமூரத்தி அணை நிரம்பிய தையடுத்து, பாலாற்றில் 24  ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோ ரம் வசிக்கும் மக்களுக்கு  பொதுப் பணித்துறை சார்பில் வெள்ள  அபாய எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.  திருப்பூர் மாவட்டம். உடுமலை அருகே அமைந்துள்ளது திரு மூர்த்தி அணை. பரம்பிக்குளம் ஆழி யாறு திட்ட (பிஏபி) தொகுப்பு அணைகளில் ஒன்றான திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப் பட்டு திருப்பூர், கோவை மாவட்டங் களில் உள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு பாசன வசதி பெறுவது டன், உடுமலை நகராட்சி மற்றும் உடுமலை ஒன்றியம்,  குடிமங்கலம் ஒன்றியப்பகுதியிலுள்ள கிரா மங்களுக்கு குடிநீர் திட்டங் களுக்கும் பயன்பட்டு வருகிறது.

 இந்நிலையில், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,145 கன அடி யாக உள்ளது. புதனன்று காலை  நிலவரப்படி, அணையின் நீர் பிடிப்பு மொத்தமுள்ள 60 அடியில் 58 அடியாக உயர்ந்த நிலையில்,  அணையிலிருந்து பிஏபி 4 ம் மண் டலத்திற்கு பிரதான கால்வாய், உடுமலை கால்வாய், குடிநீருக்கு என வினாடிக்கு 1010 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.  திருமூர்த்திமலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை கார ணமாக, அணை நிரம்பியதைய டுத்து, பாலாற்றில் 24 ஆண்டு களுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட் டுள்ளதால், பாலாற்றின் வழியோர கிராமங்களுக்கும், கேரளா மாநி லம் சித்தூர், ஒலவங்கோடு உள் ளிட்ட வழியோர மக்களுக்கும்  பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.  முன்னதாக, திருமூர்த்தி அணை  கடந்த 1997 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம்  தேதி நிரம்பியது. அதன் பிறகு 24 ஆண்டுகளாக நிரம்ப வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.