ஈரோடு, ஜூன் 1 – மூன்றாம் வகுப்பு படித்தவ ருக்கு கூட காந்தி குறித்து தெரியும். இப்படி ஒரு அறிவீலியான பிரத மரை இப்போதுதான் பார்க்கிறோம் என காங்கிரஸ் கட்சின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோ வன் சாடினார். ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங் கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்திய தேர்தல் வர லாற்றில் இதுபோன்ற மோசமான தேர்தல் நடந்தது கிடையாது. தேர் தல் ஆணையாளராக இருக்கின்ற மூன்று பேரும் பிரதமர் மோடியின் எடுபிடிகளாக மாறி விட்டனர். மோடி, தேர்தல் ஆணைய வழி முறைகளை மீறி, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியா னம் செய்கிறார். எல்லா தொலைக் காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இது என்ன நியாயம் என்று எனக்குத் தெரியவில்லை. மக்கள் 48 மணிநேரம் அமைதியாக இருந்து, சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத்தான், வாக்குப்பதிவிற்கு 2 நாட்களுக்கு முன்பே பிரச்சாரத்தை தடை செய் திருக்கிறார்கள். இதுவரை அந்த நடைமுறை இருந்து வந்துள்ளது. ஆனால், இன்றைக்கு நடக்கும் தேர்தலில், விதிமுறைகள் பலவா றாக மீறப்படுவதற்கு பிரதமர் மோடி தான் காரணம். தேர்தல் ஆணை யம் அவரது கைப்பாவையாக இருக்கிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும் போது, தேர்தல் ஆணையத்தில் இருக்கும் அதிகாரி களில் தவறு செய்தவர்கள் குற்ற வாளிகளாக நிறுத்தப்படுவார்கள். 1980 ஆம் ஆண்டு காந்தி படத்தைப் பார்த்தபின் தான், தனக்கு காந்தியைப் பற்றி தெரியும் என பிரதமர் மோடி சொல்லியி ருக்கிறார். இவரை இந்தியர் என்று சொல்வதா? இவர் 3 ஆம் வகுப்பு கூட படிக்கவில்லை போலி ருக்கிறது. காந்தியைத் தெரிய வில்லை என ஆப்பிரிக்க நாடு களில் கூட யாரும் சொல்ல மாட்டார் கள். இது போன்ற வரலாற்று நிகழ்ச்சிகளை எல்லாம் மறந்து விட்டு, பிரதமராக இருக்கிறவர் காந்தியைத் தெரியாது என்று சொன்னால், எவ்வளவு பெரிய அறிவிலியை நாம் பிரதமராக ஏற்றுக் கொண்டு இருகிறோம் என வெட்கப்பட வேண்டியுள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் மோடி யை மக்கள் தூக்கி எறிவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி நல்ல ஆட்சியைத் தரும். பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறும்போதுதான் விடிவு காலம் ஏற்படும். தேர்தல் முடி வுக்குப்பிறகு 26 கட்சிகளைச் சேர்த்த இந்தியா கூட்டணியினர் ஒன்று சேர்ந்து, பிரதமர் குறித்து முடிவு எடுப்பார்கள், என்றார்.