சேலம், செப்.9- சேலம் அருகே அரசுப் பள்ளியில் எழுத்தறிவு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 12 மணி நேரம் தொடர்ந்து தமிழ் வாசித்து மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர். தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் திட்டத்தை மைய மாகக் கொண்டு, உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் “தமிழ் வாசிப்பு பெருவிழா” நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழுவின் சார்பில் நடந்த இந்த விழாவில் தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் 745 மாணவ, மாணவிகளின் 504 பேர் தமிழ் வாசிப்பு பெருவிழாவில் பங் கேற்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாசிப்பு இரவு 7 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் இடைவிடாது நடந்தது. தமிழ் மொழி குறித்த 250 தலைப்புகளில் மாண வர்கள் பல்வேறு நூல்கள், பாடல்கள், தகவல்களை வாசித்தனர். குறிப்பாக தமிழ் மொழியின் தோற்றம், சிறப்பு, சங்க கால நூல்கள், திருக்குறள், பாரதி பாட்டு உள்ளிட்டவற்றை மாணவர்கள் வாசித்தனர். ஆங்கில வழியில் படிக்கும் இப் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வமாக பங்கெ டுத்து தமிழை வாசித்தனர். இதையடுத்து இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் சுமதி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதில், வட்டார கல்வி அலுவலர் எஸ்தர் ராணி, பிரேம் ஆனந்த், பள்ளி தலைமை ஆசிரியை அமுதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.