districts

img

அரசு பள்ளி ஆசிரியர் இடமாற்றம்? மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்

சேலம், டிச.13- ஆசிரியரை இடமாற்றம் செய் யக் கூடாது என வலியுறுத்தி இளம் பிள்ளை அருகே அரசு பள்ளி  மாண வர்கள், பெற்றோர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், இளம்பிள் ளையை அடுத்துள்ள இலகுவம் பட்டி பகுதியில் அரசு ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல் பட்டு வருகிறது. இப்பள்ளியில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், தொடக்கப்பள்ளியின் ஆங் கில ஆசிரியராக சந்தோஷ் குமார்  என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் சிறப்பாக மேற் கொள்ளப்படும் ஆங்கில வழிக் கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அப்பகுதி மக்களிடையே தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற் படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக கடந்த காலத்தில் 30 குழந்தைகள் மட்டுமே பயின்று வந்த இந்த பள்ளியில் தற்போது 160 குழந்தைகள் வரை சேர்த்து அப்பகுதி பொதுமக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ளார். இந்நிலையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியருடன், அவ ருக்கு ஏற்பட்ட கருத்து மோதலால் அவரை பணியிட மாற்றம் செய்ய நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதுதொ டர்பாக மாவட்ட கல்வி அதிகாரி கொண்டக் குழு பேச்சுவார்த்தை  நடத்துவதற்காக திங்களன்று பள் ளிக்கு வந்துள்ளனர். இதனைய றிந்த தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது  பெற்றோர் உள்ளிட்டோர் அதிகாரி களை முற்றுகையிட்டனர். இதன் பின், ஆசிரியர் சந்தோஷ் குமாரை இடமாற்றம் செய்யக்கூடாது என  வலியுறுத்தி பள்ளியின் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைய டுத்து காவல் துறையினர் மற்றும் கல்வி அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனை வரும் கலைந்து சென்றனர். இத னால், அப்பகுதியில் பெரும் பரப ரப்பு ஏற்பட்டது.

;