districts

img

பாலியல் வன்முறையை தடுத்திடுக

நாமக்கல், டிச.7- மாணவிகள் மீதான பாலியல் வன் முறையை தடுத்திட உரிய சட்டம் இயற்றிடக் கோரி நாமக்கல்லில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மகளிர் மேல்நிலைப் பள்ளி யில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது உரிய நடவ டிக்கை எடுத்திட வேண்டும். உச்சநீதி மன்ற உத்தரவுப்படி விசாகா மற்றும் ஐசிசி கமிட்டி அமைத்திட வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் பூங்கா சாலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்கத் தின் நாமக்கல் மாவட்ட தலைவர் எம்.தேன் மொழி தலைமை தாங்கினார். மாவட்ட செய லாளர் தே.சரவணன், மாவட்ட நிர்வாகிகள் தங்கராஜ், கோகுல், மோகனா, அகிலன், நந்திஸ், மதனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.